dhanush_and_amala_paul

சில படங்களில் அமலாபால் தொடந்து புக் ஆகி வருகிறார். இந்த நிலையில்தான் சவுந்தர்யா இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கப் போகும் படம் ஒன்று உருவாகி வருகிறது ? அதில் அமலாபால் இருப்பாரா என்கிற சந்தேகம் வந்திருக்கிறது கோடம்பாக்கத்திற்கு. இந்த சந்தேகம் ஏன் வரணும்?

ஏன்னா… இந்தப்படம் வேலையில்லா பட்டதாரி படத்தின் பார்ட் 2 என்கிறார்கள். பார்ட் ஒன்னில் நடித்த அத்தனை பேரும் இதிலும் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கிறாராம் தனுஷ். முதலில் இப்படத்திற்கு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்றுதான் தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. ஆனால், தாறுமாறாக ஓடி கோடிகோடியாக குவித்த ஒரு படத்தின் செகன்ட் பார்ட் என்றால், இன்னும் எதிர்பார்ப்பு எகிறுமே? இந்த யோசனைக்கு யெஸ் சொல்லிவிட்டார் தனுஷ்.

பார்ட் 1 ல் நடித்த அத்தனை பேரும் ஏதோவொரு காட்சியில் தோன்றுவார்கள் என்பது மட்டும் இப்போதைக்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாம். அதன்படி அமலாபாலும் வருவார். ஆனால் அவரது கேரக்டரை நீடிப்பதா, குறைப்பதா என்பதை தனுஷ்தான் முடிவு செய்வார்.