Tamil Cinema News | சினிமா செய்திகள்
அப்படியெல்லாம் என்னை அவருடன் ஓப்பிட்டு பேசாதீர்கள் – அமலா பால்
தனுஷுடன் தன்னை சேர்த்து பேசுவது மிகுந்த வருத்தமாக உள்ளது என்று நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.
நடிகை அமலா பாலுக்கும், தனுஷுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது என்றும் இதுவே அமலாவின் திருமண வாழ்க்கையை நாசமாக்கிவிட்டது என்றும் பேசப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து அமலா மலையாள செய்தி இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
நானும், என் கணவர் விஜய்யும் பிரிந்து விவாகரத்து கோர நடிகர் தனுஷ் காரணம் என்று கூறுகிறார்கள். இதில் உண்மை இல்லை. அவருக்கும் இந்த விஷயத்திற்கும் தொடர்பு இல்லை.
நானும், விஜய்யும் பிரிய முடிவு செய்தபோது அது குறித்து அறிந்த தனுஷ் அதிர்ச்சி அடைந்தார். எங்களை பிரிய வேண்டாம் என்று கூறி எவ்வளவோ சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.
தனுஷ் எனக்கு நல்ல நண்பர். அவ்வளவு தான். அதை தான் எங்களுக்குள் ஒன்றும் இல்லை. அப்படி இருக்கும்போது அவருடன் என்னை சேர்த்து வைத்து பேசுவது அசிங்கமாக உள்ளது, வருத்தமாக உள்ளது.
எதுவுமே இல்லாமலேயே என்னையும், தனுஷையும் பற்றி ஏதேதா பேசப்படுவதால் அவரை பார்க்கவே கஷ்டமாக உள்ளது.
