கடவுள் நிறைய சோதிச்சுட்டான் ஆனா கைவிடல.. ஐஸ்வர்யாவால் நிம்மதி பெருமூச்சு விடும் ரஜினி!

தமிழ் திரையுலகை பொறுத்த வரையில், தனுஷ் ஐஸ்வர்யா பிரிந்தததை தொடர்ந்து, பல நட்சத்திர ஜோடிகள் விவாகரத்து செய்தது. இதை தொடர்ந்து, யார் வீட்டில், என்ன நடந்தாலும், உடனே தனுஷை திரும்பி பார்க்க ஆரம்பித்தார்கள் நெட்டிசன்கள். தனுஷும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் இணைவது உறுதி என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து, தனுஷ் பல படங்களில் கமிட் ஆகி வசூல் மன்னனாக மாறி வருகின்றனர். இன்னொரு பக்கம், டைரக்டர் அவதாரம் எடுத்தார் ஐஸ்வர்யா. மறுபக்கம் சூப்பர் ஸ்டார் வழக்கம் போல நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சூப்பர்ஸ்டார் சினிமாவுக்கு வந்து 50 வருடம் ஆகப்போகிறது. அதற்கான விழா ஏற்பாடுகளும், ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது அவர் நடித்து கொண்டிருக்கும் வேட்டையன் படத்திற்கும் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில், வேட்டையன் படம் போலி என்கவுண்டர் தொடர்பான படம் என்றும் சொல்லப்படுகிறது. அனிருத் உட்பட பல ரஜினி ரசிகர்கள் படத்தில் வொர்க் பண்ணியிருக்காங்க. இதுவே படம் வெற்றி பெற முதன்மை காரணமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் அவருக்காக அவர் சினிமாவுக்கு அந்த 50வது வருடத்தை சினிமா துறையினர் கொண்டாட போகிறார்கள். அதில் தனுஷும் இருப்பார். சமீபத்தில் ஐஸ்வர்யாவின் இன்ஸ்டா பதிவுகளுக்கு எல்லாம் தனுஷ் லைக் போட்டுக்கொண்டு இருக்கிறார். என்னதான் ஊருக்கே சூப்பர்ஸ்டார் ஆக இருந்தாலும், பெத்த பொண்ணு வாழ்க்கை இப்படி வீனா போகுது என்ற கவலை இல்லாம இருக்குமா?

அதனால், நீர் அடிச்சு நீர் விலகாது என்ற சொல்லுக்கு ஏற்ப, இவர்கள் விரைவில் சேர்ந்து விடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்காக அவ்வப்போது, தனுஷ் ஐஸ்வர்யா சந்திக்கும்போது, கண்டிப்பாக பழைய காதல் எட்டி பார்க்கும். சினிமாவை போல கடைசியில் ஒன்று சேர தான் போகிறார்கள். அது எப்போது என்று தான் தெரியவில்லை.

தலைவரின் சினிமா வசன வரிகள் போல நல்லவனுக்கு கடவுள் நிறைய சோதனை கொடுப்பான், ஆனா கைவிடமாட்டான் என்பது போல தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் இணைய உள்ள செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -spot_img

Trending News