தனுஷ் இந்தியில் அறிமுகமான படம் ராஞ்சனா மற்றும் மாதவன் நடித்த தனு வெட்ஸ் மனு, அர்ஜுன் கபூர் நடித்த அவுரங்கசீப், ஹிருத்திக் ரோஷன் நடித்த குஸாரிஷ் உள்ளிட்ட பல்வேறு பாலிவுட் படங்களில் நடித்தவர் சுவரா பாஸ்கர்.

swara bhaskar

இவர் படப்பிடிப்பின்போது இயக்குனர் ஒருவர் தனக்கு அளித்த செக்ஸ் டார்ச்சர் பற்றி பகிரங்கமாக தெரிவித்து அதிரடி கிளப்பியிருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறியது: 2009ம் ஆண்டு நடிக்க வந்தும் திரையுலகை பொறுத்தவரை இன்னமும் நான் புதியவள்தான். ஒரு படத்தில் நடித்தபோது அதன் இயக்குனர் என்னை டார்ச்சர் செய்தார்.

பகல் முழுவதும் நான் சென்ற இடங்களுக்கெல்லாம் பின்தொடர்ந்தார். இரவில் என்னை போனில் அழைத்து தனது ஓட்டல் அறைக்கு வரும்படியும், அங்கு படத்தின் காட்சிபற்றி டிஸ்கஸ் செய்யவேண்டும் என்றார்.

swara bhaskar

நானும் சென்றேன். அவர் குடிபோதையில் இருந்தது தெரிந்தது. படப்பிடிப்பு தொடங்கிய முதல்வாரத்திலிருந்தே என்னிடம் காதல் பற்றியும் செக்ஸ் பற்றியுமே அந்த இயக்குனர் பேசிக்கொண்டிருந்தார்.

ஒருநாள் இரவு குடித்துவிட்டு எனது அறைக்கே வந்துவிட்டார்.

swara bhaskar

தன்னை கட்டிப்பிடிக்கும் படி கேட்டார். நான் பயந்துவிட்டேன். நான் இளவயதாகவும், தனியாகவும் இருந்ததால் இது போன்று நடந்தது. இதனால் படப் பிடிப்பு முடிந்தவுடன் அறைக்கு வந்து மேக் அப்பை கலைத்துவிட்டு விளக்கை முற்றிலுமாக அணைத்து விடுவேன்.

நான் தூங்கிவிட்டதாக நினைத்து என்னை அழைப்பதை அந்த இயக்குனர் நிறுத்திக்கொண்டார். இவ்வாறு சுவரா பாஸ்கர் கூறினார்.