Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் சேதுபதி போல் தெலுங்கு படத்தில் நடிக்கும் தனுஷ்.. அதுவும் எத்தனை படங்கள் தெரியுமா?

தமிழில் துள்ளுவதோ இளமை படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி ஆடுகளம், வடசென்னை, அசுரன், கர்ணன் என தொடர்ந்து வெற்றிப்படங்களை வழங்கி வரும் தனுஷ், தற்போது தெலுங்கிலும் நடிக்க உள்ளார்.
இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வரும் தனுஷ் ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ளார். இதனை அடுத்து சேகர் கம்முலா இயக்கும் படம் மூலம் தனுஷ் தெலுங்கில் அறிமுகமாக உள்ளதாகவும், மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாகும் சமீபத்தில் செய்திகள் வெளியானது.
இந்நிலையில், மற்றுமொரு புதிய தெலுங்கு படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் அந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மென்ட் நாக வம்சி தயாரிக்கிறார். இவரும் தனுஷை ஹைதராபாத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாராம்.

dhanush-sekar-kammula
இப்படத்தை தெலுங்கில் தொலி பிரேமா, மிஸ்டர் மஜ்னு, ரங்தே போன்ற படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்க உள்ளாராம். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோலிவுட்டிலிருந்து ஹாலிவுட் வரை சென்று கலக்கிய தனுஷ், தற்போது தெலுங்கிலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்த உள்ளார்.
