Tamil Cinema News | சினிமா செய்திகள்
புலியை வேட்டையாட தைரியத்திற்கு மேல் ஒன்று தேவை : வெளியானது வட சென்னை கிஷோரின் கெட் – அப் போஸ்டர்
வட சென்னை
ரசிகர்களிடம் இந்த வருடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம். மீண்டும் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி இணைந்துள்ளது. இப்படத்தை 3 பாகமாக எடுக்க இருக்கிறார்கள் . இப்படத்தை தனுஷ் தன் வண்டர் பார் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு . வெங்கடேஷ் எடிட்டிங். கேங்க்ஸ்டர் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தில் டேனியல் பாலாஜி, கிஷோர், இயக்குநர்கள் சமுத்திரக்கனி, அமீர்,சுப்ரமண்யம் சிவா, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

Vada-Chennai
தனுஷ் அன்பு என்ற காரம் ஆடும் வாலிபராக முதல் பார்ட்டில் நடித்துள்ளது நாம் அறிந்ததே. கடந்த சில தினங்களாக கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள் மற்றும் அவர்களின் போஸ்டர்களை தனுஷ் வெளியிட்டு வருகிறார். அவ்வகையில் ஆண்ட்ரியா சந்திரா என்றும் , சமுத்திரக்கனி குணா என்ற வெளியிட்டார்.

Vada chennai – kishore
இந்நிலையில் நேற்று கிஷோர் செந்தில் எனும் ரோலில் நடிப்பதாக தனுஷ் வெளியிட்டுள்ளார். மேலும் “துரோகம் பேராசையால் நடக்கிறதா அல்லது பேராசையின் உந்துகோள் துரோகமா அல்லது புலியை வேட்டையாட தைரியத்திற்கு மேல் ஒன்று தேவையா ?” என்ற ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளார்.
#vadachennai .. kishore as #senthil Betrayal is the fruit of greed
Or
Greed is seed of betrayal
Or
Hunting down the tiger needs more than courage pic.twitter.com/LmRHrUcsTG— Dhanush (@dhanushkraja) August 17, 2018
