fbpx
Connect with us

தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரியாகும் சாய் தன்ஷிகா !

News | செய்திகள்

தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரியாகும் சாய் தன்ஷிகா !

தஞ்சாவூரில் பிறந்தவர். தமிழ் பேச தெரிந்த நடிகை. பேராண்மை, அரவான், பரதேசி, கபாலி போன்ற படங்களில் முக்கிய ரோலில் அசத்தி இருப்பார். எனினும் சோலோ ஹீரோயினாக தமிழ் சினிமாவில் இவருக்கு அதிக வாய்ப்பு அமையவில்லை என்பது தான் நிஜம்.

மேளா

தெலுங்கு சினிமாவின் பிரபலமான கதாசிரியர் கிரண். இவர் ஹீரோயினையை மையப்படுத்தும் கதை ஒன்றை தன்ஷிகாவை மனதில் வைத்து ரெடி செய்துள்ளார். அவரை சந்தித்து கதையையும் கூறியுள்ளார். அது பிடித்து போக தன்ஷிகா தற்பொழுது தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தையும் இயக்கப்போவது கிரண் தான்.

தன்ஷிகா இரண்டு பரிணாமங்களில் தோன்றுவாராம் இப்படத்தில். அதில் ஒன்று பேய் கதாபாத்திரம் என சஸ்பென்ஸை கிளப்பியுள்ளார் இயக்குனர். மேலும் சண்டைக்காட்சிகளும் உள்ளதாம், இதனை டூப் போடாமல் தானே நடித்து தருவதாக சொல்லியுள்ளாராம் தன்ஷிகா. தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் இப்படம் வெளிவருமாம். தயாரிப்பாளர் சங்க போராட்டம் முடிந்தவுடன், இப்படத்தை பற்றி தமிழ் அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top