பரதேசி, கபாலி போன்ற படத்தின் மூலம் பிரபலமானவர் தன்ஷிகா, இவர் தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் குறும்படத்திலும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த ‘சினம்’ என்ற குறும்படம் கொல்கத்தா திரைப்பட விழாவில் 8 விருது  பிரிவுகளில் வங்கியுள்ளது.

Dhansika-newtamilcinema

இந்த படத்தை ஆனந்த மூர்த்தி இயக்கியுள்ளர் மேலும் இந்த குறும்படம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த படத்தின் பக்க பலமாக ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

தற்போதுள்ள கலாச்சாரத்தை மையபடுத்தி எடுக்கப்பட்டுள்ளது படம் என்று இப்படத்தை பாராட்டி வருகின்றனர். இந்த படத்தின் கதை கருவாக தமிழ்நாட்டில் இருந்து மேற்குவங்கத்துக்கு பிழைக்க சென்று அங்கு பாலியல் தொழிலாளியாக மாறிய ஒரு பெண்ணின் கதையாக இந்த படம் உருவாக்க பட்டுள்ளது.

தன்ஷிகா பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளார். இந்த படத்தை நேஷன் கிரியேஷன் சார்பில் நேசன் திருநேசன் தயாரித்துள்ளார்.

மேலும் இந்த படம் கொல்கத்தாவில் நடைபெற்று வரும் கலாச்சார திரைப்பட விழாவில் 100- க்கும் மேற்பட்ட படங்கள் இடம்பெற்றன இதில் ‘சினம்’ விருதுகள் வங்கியுள்ளது.

இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்று வரும் கலாச்சார திரைப்பட விழாவில் 100-க்கும் மேற்பட்ட படங்கள் இடம்பெற்றன. இதில் சினம் படம் 8 விருதுகளை வென்றுள்ளது.

இந்த படத்தில் சிறந்த நடிகையாக விருதை தன்ஷிகா வாங்கியுள்ளார், துணை நடிகையாக நடித்த பத்திதா, உள்ளிட்ட 8 விருதுகளை பெற்றுள்ளது.