சூப்பர் ஸ்டார் ரஜினியின் மிகப் பெரிய வெற்றிப் படமான கபாலியின் 100 வது நாளையொட்டி, ஆதம்பாக்கத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு ரசிகர்கள் சார்பில் இனிப்பு, உணவு, பட்டாசுகள் மற்றும் பரிசுகள் வழங்கினார் நடிகை சாய் தன்ஷிகா.

கடந்த ஜூலை 22-ம் தேதி வெளியான ரஜினியின் கபாலி படம், இந்திய சினிமா சரித்திரத்தில் புதிய வசூல் சாதனைகளைப் படைத்து வெற்றி வாகை சூடியது. சர்வதேச அளவிலும் பல சாதனைகளைப் படைத்த ஒரே தமிழ்ப் படம் கபாலி.

அதிகம் படித்தவை:  பொதுமேடையில் விஜய்யின் மெர்சல் படத்தை நேரடியாக விளாசிய நடிகை தன்ஷிகா.!

வரும் தீபாவளி தினமான அக்டோபர் 29 அன்று கபாலி 100 நாட்களை நிறைவு செய்கிறது. இந்த நூறாவது நாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ரஜினியின் முரட்டு பக்தர்கள் குழு சார்பாக ஆதம்பாக்கத்தில் உள்ள 100 ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடைகள், பட்டாசு, உணவு, இனிப்பு, நோட்டுப் புத்தகங்கள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் கபாலி படத்தில் ரஜினிக்கு மகளாய் நடித்த சாய் தன்ஷிகா பங்கேற்று ரசிகர்கள் சார்பில் குழந்தைகளுக்கு அனைத்துப் பரிசுகளையும் வழங்கினார்.