dhanshika-birth-day
dhanshika-birth-day

நடிகை தன்ஷிகா ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பேராண்மை படத்தின் மூலம் பிரபலமானவர். அதன்பிறகு இவர் பரதேசி போன்ற படங்களில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி காட்டியுள்ளார். இவரது நடிப்பில் வந்த படங்கள் அனைத்தும் வித்தியாசமான கதாபாத்திரங்களை கொண்டிருக்கின்றன.

நடிகை தன்ஷிகா நேற்று சென்னையில் அவரது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார் .இவர் Aravan படத்தின் மூலம் தனது வித்தியாசமான நடிப்பை காட்டியுள்ளார். இவருக்கு எந்த படங்களும் சமீபத்தில் வரவில்லை.

நடிகை தன்ஷிகா ரஜினி நடிப்பில் உருவான கபாலி படத்தில் அவருக்கு மகளாக நடித்துள்ளார். அந்த படம் வெளியாகி இரண்டு வருடங்கள் ஆகிறது அதன்பிறகு இவர்கள் இருவரும் எந்த படத்திலும் ஒன்று சேர்ந்து நடிக்கவில்லை.

நடிகை தன்ஷிகா நடித்த படம் ஒன்றின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த டி.ஆர் தன்னை அவர்கள் மதிக்கவில்லை என ஊடகங்கள் முன்னாடி கடுமையாக விமர்சிக்கப்பட்டார். பின்பு அவரிடம் மன்னிப்பு கேட்டார். அதன் பிறகு இருவரும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் ஒன்றாக கலந்து கொள்ளவில்லை.