வியாழக்கிழமை, பிப்ரவரி 13, 2025

சந்தியா ராகம் சீரியலில் ரகுராமை எதிர்த்து மாயாவுக்கு சப்போர்ட்டாக பேசிய தனம்.. ஒன்று சேர போகும் கதிர்

Sandhiya Ragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற சந்தியா ராகம் சீரியலில், புவனேஸ்வரி போட்ட பிளான் தெரியாமல் ரகுராம் தனத்தை கூட்டிட்டு பஞ்சாயத்துக்கு வருகிறார். வந்ததும் ஊர் தலைவர்கள் முன்னாடி கதிருக்கும் தனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இனி அவர்கள் கணவன் மனைவிகளும் கிடையாது என்று சொல்லி காசு வெட்ட சொல்லி விட்டார்.

அந்த நேரத்தில் மாயா, மகளிர் அணியில் இருப்பவர்களை கூட்டிட்டு வந்து இது சட்டப்படி செல்லாது. இது சரியான முறையும் கிடையாது. கணவன் மனைவிகளுக்கு பிடிக்கவில்லை என்றால் சட்டப்படி விவாகரத்து ஆக வேண்டும் அதுதான் செல்லுபடியாகும். இந்த மாதிரி விஷயங்களை செய்யக்கூடாது என்று சொல்லி ரகுராமை தடுத்து நிறுத்தி விட்டார்கள்.

இதனால் ஆத்திரமடைந்த ரகுராம் வீட்டிற்கு கோபமாக போகிறார். பிறகு மாயாவிடம் புவனேஸ்வரி இப்ப நீ தடுத்து இருந்தாலும் நிச்சயம் தனத்தையும் கதிரையும் பிரித்து விடுவேன். ரகுராம் குடும்பத்தையும் சும்மா விடமாட்டேன் என்று சவால் விட்டுப் போய் விடுகிறார். அடுத்ததாக வீட்டிற்கு கோபமாக வரும் ரகுராம், மாயா செய்த காரியத்தால் வீட்டில் இருக்கும் பொருட்களை உடைக்க ஆரம்பித்து விடுகிறார்.

இதை பார்த்த பார்வதியும் பத்மாவும் ரகுராமை இன்னும் அதிகமாக தூண்டிவிட்டு மாயவை இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிடலாம் என்று பிளான் பண்ணி விட்டார்கள். அந்த வகையில் ஜெயிலில் இருக்கும் ஜானகிக்கு சாப்பாடு கொடுத்துட்டு வரவேண்டும் என்று சிவராமனை அனுப்பி வைத்து விடுகிறார்.

இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ரகுராம் மனதில் விஷத்தை உண்டாக்கி வீட்டிற்கு வந்த மாயாவை ரகுராம் வெளியே போக சொல்கிறார். மாயா நான் போகமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்த நிலையில் வலுக்கட்டாயமாக ரகுராம் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள முயற்சி எடுக்கிறார்.

ஆனால் அந்த நேரத்தில் தனம், எனக்காக இதுவரை நான் உங்களிடம் எதுவும் கேட்டதில்லை. தயவு செய்து இந்த முறை எனக்காக ஒன்று கேட்கிறேன். மாயா இந்த வீட்டிலே இருக்க வேண்டும் நீங்கள் வெளியே போக சொல்லக்கூடாது என்று கேட்டுக் கொண்டதன் படி ரகுராம் மாயவை வெளியே அனுப்பாமல் விட்டுவிட்டார். உடனே சந்தோஷத்தில் மாயா மற்றும் தனம் இருவரும் அக்கா தங்கை பாசத்துடன் ஒட்டிக் கொண்டார்கள்.

இதனை அடுத்து இனி கதிர் தான் நம் வீட்டுக்காரர். அவரும் நானும் ஒன்று சேர்ந்து வாழலாம் என்ற சந்தோசத்தில் தனம் இருக்கிறார். அந்த வகையில் மாயா, கதிரிடம் தனம் உன்னை விரும்ப ஆரம்பித்து விட்டார் என்ற விஷயத்தை சொல்லி விடுவார். கடைசியில் இவர்களுடைய ஜோடிக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்பதற்கு ஏற்ப ஒன்று சேரப் போகிறார்கள். இதனை எடுத்து உயிருடன் இருக்கும் கார்த்திகை மாயா கண்டுபிடித்து உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து ஜானகியை காப்பாற்றி விடுவார்.

Trending News