Tamil Cinema News | சினிமா செய்திகள்
தக் ஷாவின் அடுத்த புதிய சாதனை..! விதை போட்ட தல அஜித்!
இந்திய அளவில் பெருமை சேர்க்கும் தக் ஷாவின் புதிய சாதனை..! ட்ரான் டாக்ஸி !
தல அஜித் தற்போது அரசியல் சம்பந்தமான எந்த ஒரு ஈடுபாடும் எனக்கோ என் ரசிகர்களுக்கு இருக்காது என்று வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் தலைமையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வழிகாட்டுதலின் பேரில் தக் ஷா மாணவர்கள் ஏர் டாக்சியை தயாரித்துள்ளனர்.
ட்ரான் மூலம் வானில் பறக்கும் இந்த ஏர் டாக்ஸி கடந்த வருடம் துபாயில் அறிமுகப்படுத்தினர். ஆனால் இதனை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கு 20 வருடங்கள் ஆகும் என்று வல்லுனர்கள் கூறினார்கள்.

Dhaksha Drone
ஆனால் இதனை முறியடிக்கும் விதமாக வின் சாதனையாக இது இப்பொழுது வெளிவந்துள்ளது. இதற்கு முன்னரே இந்த அணி ஏர் ஆம்புலன்ஸ் சென்னையில் இருந்து வேலூர் வரை செல்லும் அளவிற்கு , உடல் உறுப்புகளை எடுத்து செல்வதற்கான ஏர் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தி சாதனை படைத்தன என்பது அனைவரும் அறிந்ததே.
இப்பொழுது புதிய உலகமே சாதனையாக ஏர் டாக்ஸி மற்றும் 80 கிலோ எடை வரை மனிதர்களை தூக்கி செல்லும் அளவிற்கு நிறம் கொண்ட டாக்ஸியை கண்டுபிடித்துள்ளனர். இது 20 கிலோமீட்டர் சுற்றளவில் செயல்பட வைக்கலாம்.

Dhaksha Drone Ajith
ஆபத்துக் காலங்களில் இது தீயணைப்புத் துறையினருக்கு மற்றும் மருத்துவத் துறைக்கும் மிக உதவியாக இருக்கும். தற்போது இது மக்கள் பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது. பொதுமக்கள் பார்வைக்காக ‘முதலீட்டாளர்கள் சந்திப்பு மாநாடு’ நடைபெறும் சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
