Tamil Cinema News | சினிமா செய்திகள்
பல கட்ட எதிர்ப்புகளை கடந்து வெளியாகியது தடக் ட்ரைலர்…
பல கட்ட எதிர்ப்புகளை கடந்து வெளியாகியது தடக் ட்ரைலர்.
ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் அறிமுக படமான தடக் ட்ரைலர் வெளியிடப்பட்டு இருக்கிறது.

jhanvi
பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் தடக் படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். ஜான்வி கபூருடன், இஷான் கட்டார் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை கரண் ஜோஹர் தயாரிக்கிறார். ’ஹம்டி சர்மா கி துல்ஹனியா’, `பத்ரிநாத் கி துல்ஹனியா’ ஆகிய படங்களை இயக்கிய ஷஷாங்க் இப்படத்தை இயக்கியிருக்கிறார். நாகராஜ் மஞ்சுளே இயக்கத்தில் 2016ல் மராத்தியில் வெளியான சைரத் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக தடக் தயாராகி வருகிறது.
தடக் படம் ரீலிசாக காத்திருந்த நேரத்தில் ஸ்ரீதேவி, துபாயில் திடீரென மரணம் அடைந்தார். இது கபூர் குடும்பத்தை மட்டுமல்லாது படக்குழுவிற்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியது. இதனால், ஜான்வியை நல்ல நடிகையாக கொண்டு வர வேண்டும் என்ற ஸ்ரீதேவியின் ஆசையை முதல் படத்திலேயே பூர்த்தி செய்ய படக்குழு பெரிதும் பாடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டு இருக்கிறது. ஜான்வியின் அறிமுக படம் என்பதால் பல தரப்பிலும் வரவேற்புகள் அதிகரித்து இருக்கிறது. இப்படம் அடுத்த மாதம் 30ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.
ஜான்வியின் சகோதரர் அர்ஜூன் கபூர், தனது தங்கைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், சினிமா குறித்து நீ தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். கடுமையாக உழை,நேர்மையாக இரு.உனது ஸ்டைலைப் பின்பற்று,உன்னுடைய உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அதனைக் கேட்டு நட. ‘தடக்’ படத்திற்கு வாழ்த்துக்கள். நீயும்,இஷானும் இணைந்து நவீன ரோமியோ-ஜூலியட்டை உருவாக்கி இருப்பீர்கள் என நினைக்கிறேன். ஆனால் நான் எப்போதும் உனக்கு ஆதரவாக இருப்பேன், கவலைப்படாதே என உருக்கமாக குறிப்பிட்டு இருக்கிறார். போனியின் முதல் மனைவி மோனா கபூரும், அர்ஜூன் கபூரின் அறிமுக படம் வெளியாக இருந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தான் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
