Connect with us
Cinemapettai

Cinemapettai

devipriya-01

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லோ பட்ஜெட் ஜோதிகா.. வைரலாகும் நடிகை தேவிப்ரியா வெளியிட்ட புகைப்படம்

90களில் சீரியல் வில்லியாக பிரபலமானவர் தேவிப்பிரியா. அதாவது சின்னத்திரை நீலாம்பரி என்றும் அழைக்கப்பட்டார்.

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான சக்தி தொடரின் மூலம் தேவிபிரியா ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். இவர் போலீசாக வேண்டும் என்பது தான் கனவாக வைத்திருந்தார்.

அதற்கு பலனாக பாரதிராஜா இயக்கத்தில் சீரியல் ஒன்றில் பெண் போலீஸ் அதிகாரியாக நடித்து அனைத்து ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.

வில்லி கதாபாத்திரத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்தவர். இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு நானும் நடிகை வரிசையில் இருக்கிறேன் என்று நினைவு படுத்திக் கொண்டிருந்தார்.

அந்த வகையில் தற்போது ஃபுல் மேக்கப்பில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், நீங்க மட்டும் எவ்வளவு வயசானாலும் அப்படியே இருக்கீங்களே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் லோ பட்ஜெட் ஜோதிகா எனவும் கிண்டல் செய்து வருகின்றனர். குஷி படத்தில் வரும் ஜோதிகாவை போல அவரது புகைப்படம் இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

அப்படி எல்லாம் இல்லை என்று சொன்னால் நம்மிடமே சண்டைக்கு வருகிறார்கள். நம்மளும் சொல்லி வைப்போம், ஜோதிகா மாதிரி இருக்கீங்க மேடம்.

devipriya-latest-photo-looks-like-old-jyothika

devipriya-latest-photo-looks-like-old-jyothika

Continue Reading
To Top