Tamil Cinema News | சினிமா செய்திகள்
தேவி ஸ்ரீ பிரசாத்திடம் கெஞ்சிய தளபதி… எதற்கு தெரியுமா?
தேவி ஸ்ரீ பிரசாத்திடம் கெஞ்சிய தளபதி.
புலி படத்தில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்திடம், தளபதி விஜய் கெஞ்சிய சுவாரசிய தகவல் வெளியாகி இருக்கிறது.
சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான படம் புலி. இப்படத்தில் விஜய் நாயகனாகவும், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மோத்வானி நாயகிகளாக நடித்திருந்தனர். பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவி வில்லனாக நடித்தார். சுதீப், பிரபு, தம்பி ராமையா, நந்திதா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். அப்பா, மகன் என இரு வேடங்களில் விஜய் நடித்திருந்தார். வேதாளம் என்னும் மாய உலக கதையை பின்னணியாக கொண்டு படம் எடுக்கப்பட்டு இருக்கும். பாகுபலியை தொடர்ந்து இப்படம் எடுக்கப்பட்டதால், படத்திற்கு சொல்லிக் கொள்ள கூடிய வரவேற்பு கிடைக்கவில்லை. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார். எல்லா பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதி இருந்தார்.
இப்படத்தில் ஏண்டி ஏண்டி என்ற பாடலை ஸ்ருதிஹாசனுடன் இணைந்து தளபதி விஜய் பாடி இருந்தார். பெரும்பாலும், விஜய் தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடி இருக்கிறார். தன் படத்தில் ஒரு பாடல்களை பாடி அனைவரையும் கவர்வதில் சூப்பர் ஹீரோ. இந்நிலையில், ஏண்டி ஏண்டி பாடலை தேவி ஸ்ரீ பிரசாத், தளபதி விஜயை பாடும்படி கேட்டு இருக்கிறார். ஆனால், விஜய் முதலில் தயங்கி இருக்கிறார். காரணம், விஜய் எப்போதுமே ஃபாஸ்ட் பாடல்களை தான் அதிகமாக பாடிபவர். இதனால், மெலடி அவரின் திரை வாழ்வில் பாடியது சொற்பம் தான். இதனால், தேவி ஸ்ரீயிடம் நீங்களே இந்த பாடல்களை பாடுங்கள் என கெஞ்சி இருக்கிறார். ஆனால், அதற்கு டிஎஸ்பி ஒப்புக்கொள்ளவே இல்லையாம். விடாப்படியாக நின்று விஜயை பாட வைத்து இருக்கிறார்.
கடைசியில், வேறு வழியில்லாமல் விஜய் பாடி கொடுத்துள்ளார். ஆனால், விஜய் எதிர்பார்த்ததும் போல இல்லாமல் இந்த பாடலும் செம ஹிட்டாகி இருந்தது. பின்னர், புலி பட விழாவில், டிஎஸ்பியை பார்த்த இயக்குனர் சந்திரசேகர், என் பையனையும் மெலடி பாடல் பாட வைச்சிட்டப்பா, சூப்பராக இருந்தது என பாராட்டி இருக்கிறார். இது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக தேவி ஸ்ரீ பிரசாத் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
