devi-record-in-chennai

ஏ.எல். விஜய் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா, தமன்னா, ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் ஆயுத பூஜை ஸ்பெஷலாக வெளியாகியிருக்கும் ஹாரர் காமெடி படம் தேவி. தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபுதேவா ஹீரோவாக நடித்திருக்கும் படம் என்பதால் ரசிகர்கள் இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்தார்கள்.

அதற்கேற்றாற்போல் படமும் சுவாரஸ்யமாக அமைந்து ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ளது. இதன்மூலம் சென்னையில் 144 திரைகளில் வெளியான இப்படம் தற்போது மூன்றாம் வாரத்தில் 196 திரைகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் சென்னையில் மட்டும் இப்படம் இதுவரை ரூ. 2.42 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

பிரபுதேவா நடிப்பில் ரொம்ப நாட்களுக்கு அப்புறம் ஒரு படம் நன்றாக ஓடி கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து ஹிந்தி பக்கம் போகாமல் தமிழில் கொஞ்ச நாள் இருப்பார் என்றே தோன்றுகிறது. அதுக்குத்தான் விஷால் கார்த்தி வைத்து ஒரு படம் இயக்கி கொண்டு இருக்கிறார். அமலபால் பிரிவுக்கு பின்னர் விஜயின் மகிழ்ச்சியான மேட்டர் 3 மொழியிலும் வெற்றி.