தேவி ஓடியே ஆகணும்! தெருத் தெருவாக திரியும் பிரபுதேவா!
ஒருவகையில் இது நல்லதா, கெட்டதா? தெரியாது. ஆனால் இதே விஷயம் தொடர்ந்து பின்பற்றப்பட்டால் சந்தோஷம்தான்!
வேறொன்றுமில்லை… பிரபுதேவா தயாரித்து நடித்திருக்கும் ‘தேவி’ இன்னும் சில தினங்களில் ரிலீஸ். ஆனால் இப்படத்தை பற்றிய நல்ல அறிகுறிகள் தியேட்டர் பக்கத்திலிருந்தும் சரி. ரசிகர்கள் பக்கத்திலிருந்தும் சரி. பூஜ்யம்!
எப்படியும் குப்புற விழப்போறதுன்னு ஆகிருச்சு. மூக்கு வரைக்குமாவது ஹெல்மெட் போட்டுக் கொள்வோமே என்று முடிவெடுத்த பிரபுதேவா, மும்பையிலிருந்த தமன்னாவையும் வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு ஒவ்வொரு ரேடியோ எப் எம் ஸ்டேஷனாக அலைந்து கொண்டிருக்கிறார். அடுத்ததாக சேனல் விசிட் இருக்குமாம். ஒருகாலத்தில் இவர் நடித்த படங்களின் பிரஸ்மீட்டுக்கு கூட வர மாட்டார். ஆனால் இப்போது தேவி பட டைட்டிலில் தயாரிப்பாளர் என்று பெயர் வருகிறதல்லவா? அதனால்தான் இத்தனை சுற்றல் சுழலல்.
என்னதான் இவருக்கு ஆதரவு கொடுக்கும் ஊடகங்களாக இருந்தாலும், “யோவ்… சிவகார்த்திகேயன் படமும் விஜய் சேதுபதி படமும் போட்டிக்கு வருது. அதனால்தான் இந்தாளு கூப்பிடாமலே வரட்டுமா வரட்டுமான்னு கேட்டு வர்றாரு. இவங்க படம் மட்டும் போட்டிக்கு வரலேன்னு வையி… நாம போன் அடிச்சாலும் நாட் இன் யூஸ்னுதான் ரிங்டோன் வரும்” என்கிறார்கள்.
என்னதான் பரமசிவன் கழுத்திலிருக்கிற பாம்பா இருந்தாலும், பசின்னு வந்திட்டா பால் பாக்கெட்டை தேடி ஓடிதானே ஆகணும்?
