நடிகை தேவயானி தமிழ்,தெலுங்கு,மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்தவர் இவர் ஒருசில ஹிந்தி படத்திலும் நடித்துள்ளார் அதன் பின்பு சன் டிவியில் கோலங்கள் என்ற சீரியலில் நடித்து பல சீரியல் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார்.

devayani
devayani

மேலும் இவர் 2001 ல் இயக்குனர் ராஜ்குமாரை திருமணம் செய்து கொண்டார் அதன் பின்பு நடிப்பதை விட்டுவிட்டார் ஆனால் சென்னையில் உள்ள பிரபல பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார், தனது குடும்பத்துடன் தனது வாழ்க்கையை மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்.

தேவயானி மற்றும் ராஜ்குமாருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் அவர்களின் பெயர் இனியா மற்றும் பிரியங்கா இவர்களை வெளியுலகத்திற்கு அதிகம் காட்டியது இல்லை தற்பொழுது இவர்களின் புகைபடம் வெளியாகி வைரலாகி வருகிறது.

தனது மகள்கள் மற்றும் கணவருடன் ஒரு விருது விழாவில் கலந்து கொண்டார் தேவயானி அப்பொழுது எடுக்க பட்ட புகைப்படம் தான் இப்பொழுது வைரலாகி வருகிறது.