Connect with us

Cinemapettai

வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகுமா தேவர்மகன்-2.? எகிறும் எதிர்பார்ப்பு!

devarmagan-part-2-vetrimaran

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகுமா தேவர்மகன்-2.? எகிறும் எதிர்பார்ப்பு!

இந்திய திரையுலகையே மிரளவைத்த படங்களில் ஒன்று தான் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தேவர் மகன். இந்த படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையை ஏழு நாட்களுக்குள் கமல்ஹாசன் எழுதி முடிந்ததாகவும்  கூறப்படுகிறது.

இந்தப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், கௌதமி, ரேவதி, நாசர், வடிவேலு என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து படத்தை பிரம்மாண்ட வெற்றியடையச் செய்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் கமல்ஹாசன் “தேவர் மகன் 2” படத்தை எடுக்கப்போவதாக அறிவித்திருந்தார். தற்போது “தேவர் மகன் 2” ஒரு வெற்றிக் கூட்டணியாக உருவாகப் போவதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அதாவது அரசியல், சினிமா, பிக்பாஸ் என மூன்று வித்தைகளையும் ஒரே நேரத்தில் காட்டிக் கொண்டிருக்கும் கமலஹாசன் சமீபத்தில் ‘தேவர் மகன் 2’ படத்தை எடுக்கப் போவதாக அறிவித்தார். இதனால் ரசிகர்களிடையே இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இவ்வாறிருக்க, கமல்ஹாசன், தனுஷ், வெற்றிமாறன் ஆகியோரின் கூட்டணியில் தேவர் மகன் படம் எடுக்கப்பட்டால் டாப் டக்கரா இருக்கும் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் வெற்றிமாறனுக்கும், தனுஷுக்கும் இடையே இருக்கும் அபரிமிதமான கனெக்சன் இந்த படத்தை மிகப்பெரிய வெற்றிப் படமாக்கும் என்று பலர் கூறி வருகின்றனர்.

அசுரன் படத்தில் கிராமத்து கதாபாத்திரத்தில் தனுஷ் மிரட்டியிருப்பார் என்றே கூறலாம், இதை எல்லாம் அடிப்படையாக வைத்து தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்தில் தனுஷ் நடிக்க வைக்கலாம் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

kamal-cinemapettai

kamal-cinemapettai1

எனவே, சிவாஜி கணேசனின் கெட்டப்பில் கமலஹாசனையும், கமல் கெட்டப்பில் தனுசையும் திரையில் காண அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்தப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்நோக்கி ரசிகர்கள் பலர், ஆவலோடு காத்திருக்கின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top