fbpx
Connect with us

Cinemapettai

அண்ணனின் (கௌதம் கார்த்திக்கின்) ஆட்டம் – தேவராட்டம் திரை விமர்சனம்.

Reviews | விமர்சனங்கள்

அண்ணனின் (கௌதம் கார்த்திக்கின்) ஆட்டம் – தேவராட்டம் திரை விமர்சனம்.

குட்டி புலி, கொம்பன், மருது, கொடிவீரன் வரிசையில் முத்தய்யா இயக்கத்தி வெளியாகியுள்ள படம். சக்தி சரவணன் ஒளிப்பதிவு, நிவாஸ் பிரசன்னா இசை. எடிட்டிங் பிரவீன். தயாரிப்பு ஸ்டூடியோ க்ரீன். ட்ரைலர், ப்ரோமோ பார்த்ததில் இருந்தே மதுரை பின்னணியில் மாஸ் மசாலா ஆக்ஷன் படம் என நாம் ஊகித்திவிட்டு அதே எதிர்பார்ப்புடன்தான் திரையரங்கில் நுழைந்தோம் . எனினும் இந்த ஆட்டம் நம்மை மகிழ்விக்குமா அல்லது அழவைக்குமா என வாங்க பார்ப்போம்.

அப்பா அம்மா இறந்து விட, மூத்த அக்காளின் வளர்ப்பில் வளரும் BA BL படித்து முடித்த கவுதம் கார்த்திக். ஆறு சகோதரிகளும் கூட்டு குடும்பமாக வாழ, அனைவருக்கும் செல்லம் நம் ஹீரோ. மஞ்சிமா மோகனும் வக்கீல் தான், வழக்கம் போல பார்த்ததும் காதல் தான்.

தன்னை சுற்றி நடக்கும் பிரச்சனை தட்டி (அடித்து, உடைத்து) கேட்பது தான் ஹீரோவின் முழு நேர வேலை. அப்டி ஒரு தகராறில்,பெரிய கை ஒருவரின் மகனை கொலை செய்து சரண் அடைகிறார். வில்லன் 16 நாள் கேடு கொடுக்க, ஹீரோ பதுங்கினாரா அல்லது பாய்ந்தாரா என்பதே மீதி கதை.

சினிமாபேட்டை அலசல் –  இது தான் இப்படத்தில் இருக்கும் என எதிர்பார்ப்புடன் செல்வதால், பெரிய ஏமாற்றம் ஏற்படாது. எனினும் கார்த்தியின் “கடை குட்டி சிங்கம்” சமீபத்தில் வெளியானதால், பல இடங்களில் நமக்கு நெருடல் தான். அடுத்து என்ன ஆகும் என்பதை எளிதில் ஊகித்து விடலாம்.

ஆக்ஷன் காட்சிகள் மற்றும் கெளதம் கார்த்திக் தான் மிகப்பெரிய பிளஸ். சுள்ளான் போல இருந்தாலும் மாஸ் ஹீரோவாக ஜெயித்துவிட்டார். எனினும் அழுத்தமான கதை இல்லாதது மைனஸ் தான். நிவாஸ் கே பிரசன்னா பின்னணி இசையில் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாம்.

பி மற்றும் சி சென்டர் தான் இவர்கள் டார்கெட். எனினும் அந்த ரசிகர்களும் படத்தில் குறைந்தபட்ச விஷயங்களை எதிர்பார்ப்பார்கள். சென்டிமென்ட், காமெடி என எதுவுமே நன்றாக அமையவில்லை. மதுரையை வைத்து படம் எடுத்தால் ஓடிவிடும் என்ற நினைப்பை முதலில் இயக்குனர் மூட்டை கட்ட வேண்டும். மேக்கிங் நன்றாக இருந்தாலும், யதார்த்தமும் அழுத்தமும் தேவை இயக்குனரே.

ஆக மொத்தத்தில் சூர ஆட்டமாக இருக்கும் என எதிர்பார்த்து சென்ற நமக்கு சுமாரான ஆட்டமாக அமைந்தது இந்த “தேவராட்டம்”. 2.25 / 5 .

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top