முதல் நாள் வசூலில் தெறிக்க விடப்போகும் தேவரா.. 2D மெய்யழகனுக்கு தண்ணி காட்டும் ஜூனியர் என்.டி.ஆர்!

தமிழ்நாட்டில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இருக்கும் ஏகபோக எதிர்பார்ப்பு மாதிரி ஆந்திராவிலும் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், பிரபாஸ் உள்ளிட்ட நடிகர்களின் படங்களுக்கும் உண்டு. அதன்படி, நாளை ரிலீஸாகும் ஜூனியர் என்.டி.ஆரின் படமான தேவரா வசூல் சாதனை படைக்கும் என்று கூறப்படுகிறது.

பாலிவுட்டிற்குப் பின் தெலுங்கு சினிமாதான் என்று மார்தட்டி வரும் நிலையில் பாகுபலி, ஆர்.ஆர்.ஆர், புஸ்பா உள்ளிட்ட படங்களுக்குப் பின் பாலிவுட்டையும் தாண்டிச் சென்ற மாதிரி ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு இசையமைத்த கீரவாணி ஆஸ்கர் விருதையும் பெற்று கவனம் ஈர்தார். இதனால் ஹாலிவுட் உள்ளிட்ட உலக சினிமாக்கள் தெலுங்கு சினிமாவின் மீது கவனம் செலுத்தி வருகின்றன.

ஏனென்றால் பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்கள் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் காத்து வீசிக் கொண்டிருக்கும்போது, தெலுங்கு சினிமா மொத்த வசூலையும் வாரிக் கொண்டிருக்கிறது. சினிமாவில் நடிப்பவர்களுக்கு சம்பளம் வருகிறது என்றால் அதை முதல் நாளில் தங்களின் ஆஸ்தான நடிகரின் படமாகப் பார்ப்பதில் ரசிகர்களுக்கு ஒரு சந்தோசம். ஒரு பொழுதுபோக்கு.

அப்படி தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் ஜூனியர் என்.டி.ஆர் ஆர்.ஆர்.ஆர் படத்தின் மூலம் பான் இந்தியா நடிகராகக் கவனம் பெற்றார். எனவே அவரது அடுத்த படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், கொரட்டலா சிவா இயக்கத்தில் தேவரா என்ற படத்தில் அப்பா, மகன் என்று இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருடன் இணைந்து சைஃப் அலிகான், பிரகாஷ் ராஜ், கான்வி கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் மாஸாக இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்களின் மனதைக் கொள்ளைகொண்டு வைரலானது.

சமீபத்தில் பிரிவியூ ஷோ கேன்சலானதால் ரசிகர்கள் அரங்கத்தின் கண்ணாடிகளை உடைத்தனர். இதுகுறித்து ஜூனியர் என்.டி.ஆர் வீடியோ வெளியிட்டிருந்தார். இப்படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸாகும் நிலையில், இதுவரை இல்லாத வகையில் இப்படத்தில் இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கார்த்தியின் மெய்யழகன் படத்திற்குப் போட்டியாக இப்படம் வெளியாகும் நிலையில், மெய்யழகனை ஓவர் டேக் செய்வதுபோல் இதன் வியாபாரம் நடந்துள்ளது.

இப்படம் ரூ.300 கோடியில் பிரமாண்டமாக உருவாகியுள்ள நிலையில், இப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தேவரா படத்திற்கு இந்தியா முழுவதும் முதல் நாளான நாளை (செப்டம்பர் 27) ரிலீஸன்று ரூ.50 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக ஹைதராபாத்தில் 1672 காட்சிகளுக்கு ரூ.16.67 கோடி வசூலிக்கலாம் எனவும், விசாகப்பட்டினத்தில் 399 காட்சிகளுக்கு ரூ.2.64 கோடி வசூலிக்கலாம் எனவும், விஜயவாடாவில் 286 காட்சிகளின் மூலம் ரூ. 2.14 கோடி வசூலிக்கலாம் எனவும், குண்டூரில் 196 காட்சிகளில் ரூ.1.18 கோடி வசூலிக்கலாம் எனவும், ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் மொத்தமாக 5869 காட்சிகள் அட்வான்ஸ் புக்கிங் செய்ததன் மூலம் ரூ. 38.87 கோடிக்கு மேல் வசூல் குவிக்கலாம் என தகவல் வெளியாகிறது.

பெங்களூரு மற்றும் கர்நாடகாவில் இப்படம் ரூ.10 கோடிக்கு மேல் வசூலிக்கப்படலாம் எனவும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வசூலில் ரெக்கார்டு சாதனை படைக்கலாம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். எனவே நாளை இப்படத்தை திருவிழாபோல் கொண்டாட இன்றிலிருந்தே ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இப்படத்துக்குப் போட்டியாக கார்த்தியின் மெய்யழகன் படம் ரிலீஸாகும் நிலையில், இப்படத்தை ஜூனியர் என்.டி.ஆரின் தேவரா வசூலில் ஜெயித்துவிடும் என்றே நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News