Connect with us

Cinemapettai

‘தேவர் மகன்’ 2 தான் ‘தலைவன் இருக்கிறான்’.. ஆச்சயர்யமளிக்கும் முக்கிய தகவல்கள்

devar-magan-2

Tamil Cinema News | சினிமா செய்திகள்

‘தேவர் மகன்’ 2 தான் ‘தலைவன் இருக்கிறான்’.. ஆச்சயர்யமளிக்கும் முக்கிய தகவல்கள்

‘தேவர் மகன்’ படத்தின் 2-ம் பாகமே ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற பெயரில் உருவாக்கப்படுகிறது.

1992-ம் ஆண்டு சிவாஜி, கமல், ரேவதி, நாசர், கெளதமி, வடிவேலு, தலைவாசல் விஜய், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தேவர் மகன்’. பரதன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாக பெரிய சாதனை படைத்தது. விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதேநேரம் படத்தின் பெயர் காரணமாக சில சர்ச்சைகளும் அப்போது எழுந்தது.

இந்தப் படத்தின் 2-ம் பாகத்தை எடுக்கவுள்ளதாக கமல் கூறிவந்தார். ஆனால் ‘தேவர் மகன் 2’ என்ற பெயரில் இருக்காது என்றும் கூறியிருந்தார். தற்போது ‘தேவர் மகன் 2’ கதையைத்தான் ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற பெயரில் உருவாக்க கமல் திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள்.

‘தேவர் மகன்’ கதைப்படியே, இந்தப் படத்திலும் வடிவேலு இருக்கிறார். அவரிடம் கமல் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து வடிவேலும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

முதல் பாகத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். தற்போது ‘தலைவன் இருக்கின்றான்’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். தனது அரசியல் பயணத்துக்கு இந்தப் படத்தின் கதை பொருத்தமாக இருக்கும் என கமல் நினைக்கிறாராம்.

‘இந்தியன் 2’ படத்தை முடித்தவுடன், ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கப்படுகிறது.லைகா நிறுவனமே தயாரிக்க உள்ளதாம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top