Tamil Cinema News | சினிமா செய்திகள்
’96 படத்தில் இளம் வயது விஜய் சேதுபதியின் தோழி/ தங்கையாக நடித்தவர் எந்த பிரபலத்தின் மகள் தெரியுமா ?
96
96 ஆம் வருடம் தஞ்சையில் ஒரே கிளாசில் உள்ள இருவரும் காதல் வயப்படுகிறார்கள். பின்னர் காரணம் ஏதுமில்லாமல் பிரிய நேரிடுகிறது. அந்த இருவரும் 22 வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் பொழுது அவர்களுக்குள் நடக்கும் அன்பு பரிமாற்றம், பாசம், மீண்டும் துளிர்க்கும் காதல், அக்கறை என எமோஷன்களின் உச்சம் தான் இப்படம்.

96
விஜய் சேதுபதி, திரிஷா, பக்ஸ், தேவதர்ஷினி, முருகதாஸ் ஆகியவர்கள் நெருங்கிய நண்பர்கள். இளம் வயது விஜய் சேதுபதியாக நடித்த ஆதித்யா, நம் சீனியர் நடிகர் எம் . எஸ் . பாஸ்கரின் மகன் ஆவார். அதில் ஆதித்யாவுக்கு தோழியாக நடித்தவர் நியதி கடம்பு.

96
இவர் செல்லமாக இளம் வயது விஜய் சேதுபதியை அண்ணாத்தே என்று அழைப்பது, கிளிப் போட்ட பல் என்று அசத்து அசல் தேவரதர்சினியின் ஜூனியர் வெர்ஷனில் பொருந்தி இருந்தார்.
நியதி தேவர்தார்ஷினி – சேத்தன் தம்பதியினரின் மகள் தான்.

Devadarshini Chethan niyathi
இவருக்கே இந்த ரோலில் நடிக்க ஆசை இருந்துள்ளது, எனினும் வீட்டில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம். பின்னர் இயக்குனர் பிரேமுக்கு ஜூனியர் நட்சத்திரம் கிடைக்க தாமதமாக , தன் மக்களை நடிக்க வைக்கலாமா என்ற யோசனையை தேவதர்ஷினி இயக்குனரிடம் சொல்லியுள்ளாராம். அப்படி நிகழ்ந்தது தான் பட வாய்ப்பாம்.
