fbpx
Connect with us

Cinemapettai

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்..! தேவ் படத்தின் பாடல்!

News | செய்திகள்

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்..! தேவ் படத்தின் பாடல்!

தேவ் படத்தின் பாடல் வெளியீடு இன்னும் இரண்டு நாட்களே உள்ளது..!  ஹாரிஸ் ஜெயராஜ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!

தமிழ் நடிகர்கள் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் கார்த்தி. இவர் நடிகர் சிவகுமாரின் மகனாகவும் நடிகர் சூர்யாவின் தம்பி ஆகவும் உள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த தீரன் திரைப்படம் நல்ல வெற்றியை தேடிக் கொடுத்தது.

கார்த்தி நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தேவ். இப்படத்தில் ரகுல் ப்ரீத்தி சிங் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு ‘ஹாரிஸ் ஜெயராஜ்’ இசையமைத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டு உள்ளார்.

ஹாரிஸ் ஜெயராஜ் என்றாலே மெலடி,  அவர் இசை அமைத்து வெற்றியடைந்த படங்கள்  அதிகம். அவர் இசையமைத்து வெற்றியடைந்த படங்கள்  மின்னலே, லேசா லேசா, கஜினி, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், உன்னாலே உன்னாலே, தாம் தூம் மற்றும் ஸ்பைடர் ஆகும். 2019-ல் துருவ நட்சத்திரம்  படத்திற்கும் அவர் இசை அமைத்துள்ளார். அவர் இசையில் மயங்காத ரசிகர்கள் யாருமே இருக்க முடியாது.

தற்போது கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தை பற்றி தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் இப்படத்தின் பாடல்கள் வெளியாக உள்ளதாகவும். இப்படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளதாகவும் கூறியுள்ளார். இப்படத்தின் பாடல்கள் டிசம்பர் 29ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளனர். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top