fbpx
Connect with us

Cinemapettai

தேவ் திரை விமர்சனம்.. இந்தமுறை தப்புவாரா கார்த்தி

Reviews | விமர்சனங்கள்

தேவ் திரை விமர்சனம்.. இந்தமுறை தப்புவாரா கார்த்தி

Dev Movie Review: தேவ் திரை விமர்சனம்

காதலர் தினத்தில் காதலர்களுக்கு விருந்தாக கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் தேவ், நடிகர் கார்த்தி இப்படத்தில் பிரகாஷ்ராஜுக்கு மகனாகவும் ரகுல் ப்ரீத்தி சிங்கிற்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். படத்தில் RJ விக்னேஷ் காமெடி கதாபாத்திரத்தில் கலக்கியுள்ளார்.

படத்தின் கதை

கார்த்தி பணக்காரவீட்டு பையன் அதனால் இவர் தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார், இவர் பிரகாஷின் அரவணைப்பில் தான் வளருகிறார். தன் வாழ்க்கையில் அனுபவிக்கும் சந்தோஷங்களை  திரை கதையாக அமைத்துள்ளார் இயக்குனர். நடிகர் கார்த்தி தன் அம்மாவை பிறக்கும்போதே இழந்துவிடுகிறார். அதேபோல் ப்ரீத்தி சிங்கிற்கு அவங்க அப்பா வேறொரு உடன் காதல் ஏற்பட்டு அம்மாவான ரம்யா கிருஷ்ணன் மற்றும் ப்ரீத்தி சிங்கையும் பிரிந்து சென்றுவிடுகிறார். இதனால் இவருக்கு ஆண்கள் மீது நம்பிக்கை இல்லாத பெண்ணாக வளருகிறார்.

dev

dev

கார்த்தி , விக்னேஷ் மற்றும் அமிர்தா இவர்கள் மூவரும்ஒரே நாளில் பிறந்திருக்கிறார்கள். ஒரே பள்ளியில் படித்து சிறுவயது முதல் பெரிய வயது வரை நண்பராகவே வளருகின்றார்கள். விக்னேஷ் செய்யும் சேட்டையால் காதல் வலையில் சிக்குகிறார் கார்த்தி. விக்னேஷ் கார்த்தியின் முகநூல் பக்கத்தில் இருந்து ஒரு பெண்ணிற்கு friend request கொடுக்கிறார் அந்த பெண்தான் ரகுல் பிரீத் சிங்.  நடிகை ராகுல் ப்ரீத் தனது  Business -ல் ஈடுபடுவதால் கார்த்தியின் முகநூல் பக்கத்திற்கு எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை.

கார்த்தியின் தோழி எதார்த்தமாக விமான நிலையம் வரும் பொழுது அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வருகிறார் ப்ரீத்தி சிங். இதனை பார்த்த அந்த தோழி கார்த்தியிடம் தெரிவிக்க கார்த்திக் ஆடம்பர கார் எடுத்துவந்து ரகுல் பிரீத் சிங்கை நேரில் சந்திக்கிறார். ரகுல் பிரீத் சிங் தந்தை மீது ஏற்பட்ட வெறுப்பால் கார்த்தியும் வெறுக்க தொடங்குகிறார். ஆனால் கார்த்தி ரகுல் பிரீத் சிங் போகுமிடமெல்லாம் தேடித்தேடி அவரை சந்தித்து இம்ப்ரஸ் செய்ய முயற்சிக்கிறார்.

நிக்கி கல்ராணி சிறப்பு தோற்றம்

நிக்கி கல்ராணியை நான்கு நபர்கள் அவரை துரத்தி வருகின்றனர். அப்போது சொகுசு காரில்  வந்த கார்த்தி அந்த நபர்களை அடித்து துவைத்து விட்டு நிக்கி கல்ராணியை காப்பாற்றுகிறார். ஆனால் நிக்கி கல்ராணி செய்தி தொடர்பாளராக இருப்பதால் தன் சேனல் வைரலாக அவரே நான்கு ஆண்களை தன்னை துரத்தி வருவது போல் செய்து கார்த்தி காப்பாற்றிய அந்த வீடியோ எடுத்து தன் சேனலில் ஒளிபரப்பாகி தன் சேனலுக்கு பெருமை தேடுகிறார்.

காதல் வலையில் சிக்கிய கார்த்தி

காதல் மீதும் கார்த்தி மீதும் நம்பிக்கை வந்தவுடன் இவர்கள் இருவரும் காதலிக்கத் தொடங்குகின்றனர். ஒருநாள் கார்த்தியை மீட் பண்ணலாம் என சொல்லிவிட்டு பின்பு அவர் மும்பை சென்று விடுகிறார். அதனை அறிந்த கார்த்தி தன் பிஎம்டபிள்யூ பைக்கை எடுத்துக்கொண்டு அவரை தேடி மும்பைக்கு செல்கிறார். அதை பார்த்த ராகுல் ப்ரீத்தி சிங் சென்னைக்கு வர கார்த்தி வந்த அதே பைக்கில் ஏரி இருவரும் பயணம் செய்கின்றனர்.

பிரிவின் தொடக்கம்

ரகுல் பிரீத் சிங் தன் தொழில் காரணமாக வெளிநாடு செல்கிறார். முதலில் அவரை வழியனுப்பிவிட்டு போவதாக சொல்லிய கார்த்தி பின்பு அவர் தன் அப்பாவின் தொழிலான construction வேலையை பார்க்கிறார். அப்போது புதிய மால் கட்ட திட்டமிடுகின்றனர் அதற்கான வடிவமைப்பை கார்த்தி கொடுத்துவிட்டு. அதற்கான வேலைகளில் ஈடுபட்டதால் ராகுல் பிரீத் சிங்கை நேரில் சந்திக்க தவறிவிடுகிறார். மீண்டும் எப்படி இணைகிறார்கள் என்பது தான் மீதி கதை.

படத்தில் பிடித்தது

படத்தின் முதல் பாதி மிகவும் ஜாலியாக செல்கிறது, ஆடம்பர கார்களும் பைக் வரும் காட்சிகளும் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.  மேலும் படத்தின் கிளைமேக்ஸ் மிகவும் ரசிக்கும்படி அமைந்தது. அதுமட்டும் இல்லாமல்  படத்தின் ஒளிபதிவு மிகவும் அற்புதம்.

பிடிக்காதது

படத்தின் இரண்டாம் பாதி முடிவே இல்லாமல் செல்வது மேலும் படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்.

மொத்தத்தில் இது காதலருகளுக்கான திரைப்படம்.. மொக்க பண்ணிவிட்டார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top