எம்ஜிஆர் என்கிற மாமனிதர் இருந்த வரை தமிழ் சினிமா என்பது மிக சுதந்திரமாகவும் பாதுகாப்புடனும் தான் இருந்தது. அப்போதைய கலைஞரின் வாரிசுகள் கூட பெரிய அளவில் சினிமா ஆசைகள் கொள்ளவில்லை.

மாறன் சகோதரர்கள் தொலைக் காட்சி நிறுவனங்கள் ஆரம்பித்த பின்னர் தான் அவர்கள் சினிமா உலகிலும் கால் பதித்தார்கள்.

காரணம் சர்வ சாதாரணமாக புழங்கும் பல கோடிகள், டிவி ரைட்ஸ் தங்கள் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பும் உரிமை, தியேட்டர்களில் வெளியிடும் உரிமை,சொந்தப் படங்கள் தாயரித்தல் என கரங்களை பறந்து விரித்தார்கள்.

தூக்கம் போனது தமிழ்  கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு. அதாவது கோரப்பிடி என்பார்களே அப்படி ஒரு மரணப்பிடியில் தமிழ் திரையுலகம் விழி பிதுங்கி மரணத்தின் விளிம்பிற்கே சென்றது.

அதிகம் படித்தவை:  பிரபல நடிகை , தனது ஆர்வக் கோளாறால் சதுரமான மார்பகம் கொண்டு அவதிப்பட்டு வருகிறார்!

அதன் பின் ஜெ., ஆட்சி வந்தது. அவர்கள் திமுக குடும்பத்தினரின் மலைக்க வைக்கும் சினிமா தொடர்புகள் குறித்து நன்றாக பாடம் படித்து வைத்திருந்தனர்.

அதனால் அவர்களின் இரும்புப் பிடிக்குள் சினிமா சென்றது.மீண்டும் விழி பிதுங்கியது தமிழ் சினிமா. ஆளும் கட்சி, எதிர்க் கட்சி என இரண்டு பிரிவுகள் தோன்றியது கலைஞர்களுக்குள்.

சின்ன தயாரிப்பாளர்கள் நடுத்தெருவிற்கு வந்தார்கள். நடிகர்களில் இரண்டாம் கட்ட நடிகர்களுக்கு வாய்ப்பு இல்லை.

யாரும் எதுவும் பேச முடியாது. பேசினால் உள்ளதும் போய் விடும். எனவே வாய்பொத்தி அமைதியாய் அடிமைகளாய் இருந்தார்கள்.

இவர்களின் அதிகார சாம்ராஜ்யத்தில் பெரிதும் பாதிக்கப்படுவது அழகான நடிகைகள் என்பது உள்ளூர புகையும் விஷயம்.

அதிகார மையங்களில் இருக்கும் நபர்கள் முதலில் கண் வைப்பது அழகான ஹீரோயின்கள் மீதுதான்.

அதிகம் படித்தவை:  நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் !

அதில் அந்த கண்ணழகி நடிகை ஏற்கனவே சித்தியின் கொடுமையில் புழுவாய் துடித்துக் கொண்டிருந்தவர். மதுரை அதிகார மையத்தில் ஒருவரிடம் சிக்கி அழகு இளமை..பணம் என மொத்தமாக இழந்து அடிமை பட்டுக் கிடந்தார்.

ஆட்சி மாற்றத்திற்குப் பின்தான் அவரால் தமிழ்  படங்களில் நடிக்க முடிந்தது என்றார்கள்.

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அரசியல்வாதிகளின் பிடியில் சிக்கி இருந்த தமிழ் சினிமா மீண்டு வருகிறது.

ஆனால்,  தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கங்களில் இன்னமும் கொஞ்ச அரசியல்வாதிகளின் தலையீடு இருக்கிறது..!

அதுவும் நீக்கப்பட்டுவிட்டால் தமிழ் சினிமாவில் நல்ல சாதனைகள் பல உருவாகும் என்கிறார்கள் மூத்த கலைஞர்கள்.