Connect with us
Cinemapettai

Cinemapettai

desingu

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரஜினி படத்துக்கு போயிருவ நீ? தேசிங்கு பெரியசாமிக்கு செக் வைத்த தயாரிப்பாளர்

கடந்த சில வருடங்களாகவே முன்னணி நடிகர்களை கவரும் விதத்தில் படம் எடுத்தால் அந்த இளம் இயக்குனர்களுக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருப்பதை லோகேஷ் கனகராஜ் மற்றும் அட்லீ போன்றோரை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இவர்கள் இருவருமே தங்களுடைய முதல் படத்தின் மூலம் முன்னணி நடிகர்களை கவர்ந்து அடுத்த இரண்டு படங்களில் முன்னணி இயக்குனர்களான மாறியவர்கள். அந்த வரிசையில் இணைந்துள்ளார் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை பார்த்து மிரண்டு போன சூப்பர் ஸ்டார், அவரே போன் செய்து தனக்காக ஒரு கதை செய்யும்படி பெரியசாமியிடம் சொன்ன ஆடியோ ஒன்று வெளியாக இணையத்தை கலக்கியது.

அந்த சந்தோஷத்தில் இருந்த மீளமுடியாத தேசிங்கு பெரியசாமிக்கு அடுத்த அதிர்ச்சியாக விஜய் தளபதி 67 படம் சேர்ந்து பண்ணலாம் என வாக்குறுதி கொடுத்துவிட்டார். இதனால் இரட்டை சந்தோஷத்தில் உள்ளார் தேசிய பெரியசாமி.

இந்நிலையில் அந்த சந்தோஷத்திற்கு தடை போடும் விதமாக தயாரிப்பாளர் ஒருவர் குறுக்கே புகுந்து கட்டையை போட்டுள்ளாராம். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் முடிந்த உடனேயே தேசிங்கு பெரியசாமிக்கு அட்வான்ஸ் கொடுத்து ஓகே செய்தாராம் பிக் பாஸ் முகேன் நடிப்பில் உருவாகியிருக்கும் வேலன் பட தயாரிப்பாளர் ஒருவர்.

இப்போது அடுத்த படம் அவருக்கு செய்ய வேண்டிய கட்டாயம். இந்த நேரத்தில் ரஜினி, விஜய் என இரண்டு இமாலய நடிகர்களின் பட வாய்ப்புகள் கிடைத்ததால் தயாரிப்பாளரிடம் இந்த படத்தை செய்து வரட்டுமா எனக் கேட்டுள்ளார். ஆனால் அவரோ, ஒன்று எனக்கு விஜய் அல்லது ரஜினி படத்தின் கால்ஷீட் வேண்டும், இல்லை என்றால் எனக்கு ஒரு படம் செய்து கொடுத்துவிட்டு போங்கள் என கறாராக இருக்கிறாராம். கொடுத்த அட்வான்சை வட்டியோடு திருப்பி கொடுத்து விடுகிறேன் என கெஞ்சிய போதும் அவர் மனம் இறங்குவதாக தெரியவில்லையாம்.

desingu-periyasamy-cinemapettai

desingu-periyasamy-cinemapettai

Continue Reading
To Top