நாளை பிற்பகல் மீண்டும் ஆஜராக வேண்டும் என டிடிவி தினகரனுக்கு டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர, சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகரிடம் டிடிவி தினகரன் 1 கோடி 40 லட்சம் பணம் அளித்ததாக, டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக இன்று நேரில் ஆஜராகுமாறு நேற்று முன் தினம் தினகரனுக்கு டெல்லி காவல்துறையினர் நேரில் சம்மன் அளித்தனர். ஆனால் நேரில் ஆஜராக மூன்று நாட்கள் அவகாசம் வேண்டும் என தினகரன் நேற்று கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அந்த கோரிக்கை டெல்லி காவல்துறையினரால் மறுக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று சாணக்யபுரி காவல் நிலையத்தில் தினகரன் ஆஜரானார்.

அதிகம் படித்தவை:  'ஆக்ஷ்ன் கிங்' அர்ஜுனின் அடுத்த பிரமாண்ட படைப்பு 'சொல்லிவிடவா'!

அவரிடம் சுமார் 7 மணி நேரம் டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அவரின் செல்போனும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் அவருடைய நண்பரான மல்லிகார்ஜுனா மற்றும் உதவியாளர் ஜனார்த்தனன் ஆகியோரும் விசாரிக்கப்பட்டனர். பின்னர் 7 மணி நேர விசாரணைக்கு பிறகு சாணக்யபுரி காவல் நிலையத்திலிருந்து தினகரன் புறப்பட்டார்.

அதிகம் படித்தவை:  உடையால் சங்கடத்தில் மாட்டிக்கொண்ட ஹீரோயின்கள். டாப் 10 அலங்கோலங்கள்- பார்ட் 2.

நாளை பிற்பகல் மீண்டும் ஆஜராக வேண்டும் எனவும் டெல்லியை விட்டு வெளியேறக் கூடாது எனவும் டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் தினகரனுக்கு உத்தரவிட்டுள்ளதால், அவர் டெல்லியில் தங்கியிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.