இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட தினகரனிடம் கடந்த 5 நாட்களாக டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தினகரனை சென்னைக்கு அழைத்து வந்த டெல்லி போலீசார் அவரது அடையாறு இல்லத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். இதில் தினரகன் மனைவி மற்றும் அவரது ரகசிய தோழி ஆகியோர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என டெல்லி போலீசார் சந்தேகித்தனர்.

அதனடிப்படையில் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக தினகரன் மனைவி அனுராதாவிடம் கடுமை காட்டி விசாரித்ததை தாங்க முடியாத தினகரன் கதறியிருக்கிறார்.

பின்னர் தினகரனை தனி அறையில் அடைத்து வைத்துவிட்டு அனுராதாவிடம் விசாரணையை தொடர்ந்திருக்கிறார்கள். விசாரணையில் அனுராதா அனைத்து கேள்விகளுக்கு மழுப்பலாகவே பதிலளித்திருக்கிறார். சில கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணறியிருக்கிறார்.

இதனால் நொந்து போன தினகரன், சார் ப்ளீஸ் அவரை விட்ருங்க, எதுவாக இருந்தாலும் என்னிடம் கேளுங்கள் என்று கதறியிருக்கிறார். இதனை கண்டு கொள்ளாத டெல்லி போலீசார் தங்களது விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

தினரகன் மனைவி அனுராதாவும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.