Sports | விளையாட்டு
2020 ஐபிஎல் கோப்பை எங்களுக்கே.. டெல்லியை துவம்சம் செய்த மும்பை அணி!
பும்ரா மற்றும் ட்ரென்ட் போல்ட் வேதத்தில் சிக்கி சின்னாபின்னமானது டெல்லி அணி. டெல்லி அணி ரன்னே எடுக்காமல் 3 விக்கெட்களை பறிகொடுத்தது.
2020 குவாலிபயர் போட்டி என்பதால் இரு அணிகளுமே பல திட்டத்துடன் களத்தில் மோதிக்கொண்டன.மும்பை அணியில் பும்ரா, ட்ரென்ட் போல்ட் மீண்டும் அணிக்கு திரும்பினர். டாஸில் டெல்லி அணி வெற்றி பெற்று மும்பையை பேட்டிங் செய்ய செய்தது.
முதலில் களமிறங்கிய மும்பை அணியில் ரோகித் சர்மா மற்றும் பொல்லார்ட் இருவரும் டக் அவுட் ஆனார்கள். பின்பு சுதாரித்த வீரர்கள் இஷான் கிஷன் 55*, சூர்யகுமார் யாதவ் 51, டி காக் 40 ரன்கள் எடுத்தனர். 0ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டம் ஆடி 14 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்தார். மும்பை அணி 20 ஓவர்களில் 200 ரன்கள் சேர்த்தது.
அடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணி சேஸிங் செய்யத் துவங்கியது. அந்த அணிக்கு ப்ரித்வி ஷா – ஷிகர் தவான் துவக்கம் அளிக்க வந்தனர். ட்ரென்ட் போல்ட் வீசிய முதல் ஓவரில் ப்ரித்வி ஷா, அஜின்க்யா ரஹானே டக் அவுட் ஆனார்கள். அடுத்து பும்ரா வீசிய ஓவரில் ஷிகர் தவான் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினர்.ட்ரென்ட் போல்ட் – பும்ரா ஆதிக்கத்தால் டெல்லி அணி மிரண்டு போனது.
கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 12 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் 3 ரன்களில் க்ருனால் பாண்டியாவிடம் வீழ்ந்தார். ஸ்டோய்னிஸ் மட்டுமே அரைசதம் அடித்து ஆறுதல் அளித்தார்.

ipl-2020
