Connect with us

Cinemapettai

டெல்லியில் நடந்த தீ விபத்து..11 உயிர்களை காப்பாற்றிய ரியல் ஹீரோ இவர்தான்

delhi

India | இந்தியா

டெல்லியில் நடந்த தீ விபத்து..11 உயிர்களை காப்பாற்றிய ரியல் ஹீரோ இவர்தான்

டெல்லியில் நேற்று ‘அனாஜ் தானிய மண்டி’  என்ற இடத்தில் நடந்த கோர விபத்தில் 43 பேர் பலியானவர்கள். அனுமதி பெறாத வீட்டினுள் தொழிற்சாலை ஒன்றிலிருந்து கசிந்த கார்பன் மோனாக்சைடு விஷவாயு தாக்கி தீப்பிடித்து எரிந்தது, இதனால் 43 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

இவர்களை காப்பாற்றும் பணியில் தீயணைப்பு துறையினர் போராடினர், இதில் முக்கியமாக ராஜீவ் சுக்லா என்ற தீயணைப்பு வீரர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் போராடி 11 பேரை காப்பாற்றி உள்ளார். அவருக்கு சுகாதாரத்துறை மந்திரி நேரில் சென்று பாராட்டுகளையும் தெரிவித்து உள்ளார்.

இவர் காப்பாற்றும் போது காலில் காயம் ஏற்பட்டது கூட பொருட்படுத்த வில்லையாம், தற்போது இவருக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது. 11 பேரை உயிருடன் மீட்டார் அதுமட்டுமல்லாமல் கடைசி வரை அங்கு இருந்து அனைவருக்கும் உதவியும் செய்துள்ளார்.

இவர் செய்த உதவி சமூக  வலைத்தளங்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top