India | இந்தியா
துப்பாக்கியால் சுடச் சொன்னவங்கள துடைப்பத்தால் அடிச்சிருக்காங்க.. பிரகாஷ்ராஜ்
துப்பாக்கியால் சுடச் சொன்னவர்களை மக்கள் துடைப்பத்தால் அடித்திருக்கிறார்கள் என டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி குறித்து பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தல் கடந்த பிப்ரவரி 8ம் தேதி நடந்தது, இதில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவியது. இதில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது.

prakash-raj-1
தற்போதைய நிலவரப்படி ஆட்சி அமைக்க 36 இடங்கள் தேவை என்கிற நிலையில் 57 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருவதால் ஆட்சியை மீண்டும் தக்கவைத்துள்ளது. பாஜக 13 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் எதிலும் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து ட்விட்டரில் தெரிவித்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், “துப்பாக்கியால் சுடச் சொன்னவர்களை டெல்லி மக்கள் துடைப்பத்தால் அடித்திருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

prakash-raj
