Sports | விளையாட்டு
தங்களுக்கு தாங்களே ஆப்பு வைத்துக்கொண்ட டெல்லி! தோல்விக்கு காரணம் இந்த முடிவு தான்
டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பொழுது இருந்ததை விட காப்பிடல்ஸ் என மாறிய பின் டீம் கலக்கி வருகின்றனர். புதிய நிர்வாகம் வந்த பின் பிளே – ஆப், மற்றும் இம்முறை பைனல் வரை வந்துள்ளனர்.
2019 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணி ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக இருந்தும், கங்குலி ஆலோசகராக செயல்பட்டார். இந்த சீசன் சில வீக் பொஷிஷனை பலப்படுத்த முடிவு செய்தது டெல்லி நிர்வாகம். அஸ்வின், ரஹானேவுக்கு குறி வைத்தனர். பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த அஸ்வின் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்து நீக்கப்பட்ட ரஹானே இருவரை டீம்மில் இணைத்தனர். அஸ்வின் அவர்களை கோடி கணக்கில் பணம் கொடுத்து மற்றும் சுஜித் என்ற ஸ்பின்னரையும் கொடுத்து வாங்கினர். அதே போல ரஹானேவுக்கு மாற்றாக ராகுல் தீவாட்டியா மற்றும் மாயங் மார்கண்டே அவர்களை கொடுத்தனர்.
இந்த நிலையில் இவர்கள் செய்த மற்றோரு ட்ரான்ஸ்பர் ட்ரெண்ட் போல்ட் அவர்களை மும்பை இந்தியன்ஸ் டீமிற்கு விற்றனர். இந்த முடிவே இவர்களுக்கு பாதகமாக அமைந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

delhi-mumbai
போல்ட் இந்த சீசன் மும்பைக்கு நன்றாக ஆடினார். அதிலும் குறிப்பாக டெல்லிக்கு எதிராக கலக்கி விட்டார். லீக் போட்டிகளில் இரண்டு முறையும் டெல்லி அணியின் முதல் விக்கெட்டை தனது முதல் ஓவரிலேயே எடுத்தார். அடுத்து பிளே-ஆஃப் சுற்றில் முதல் ஓவரில் ரன்னே கொடுக்காமல் 2 விக்கெட்கள் வீழ்த்தி டெல்லி அணிக்கு ஆப்பு வைத்தார்.

trent boult MI
இறுதிப் போட்டியில் காயத்துடன் விளையாடிய போல்ட் மார்கஸ் ஸ்டோய்னிஸ் விக்கெட்டை முதல் பந்திலேயே வீழ்த்தி அசத்தினார். மேலும் அப்போட்டியில் மூன்று முக்கிய விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்ற வீரர்.
