fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சென்னையை தோற்கடிக்க நட்சத்திர வீரரை களத்தில் இறக்கும் டெல்லி

Sports | விளையாட்டு

சென்னையை தோற்கடிக்க நட்சத்திர வீரரை களத்தில் இறக்கும் டெல்லி

மிகவும் குறுகிய இடைவெளியில் நடந்த ஐபிஎல் சீசன் இந்த 2020 மற்றும் 2021 ஆக தான் இருக்கும். அரபு எமிரேக்கத்தில் சென்ற சீசன் போட்டிகள் நடந்தன.  கொரோனா சூழலில் 2021ல் இந்தியாவில் போட்டிகளை துவங்கினர், எனினும் பாதியில் நிறுத்தப்பட்டது. தற்பொழுது இரண்டாவது பாதி போட்டிகள் அரபு எமிரேக்கத்தில் முடியும் தருவாயில் உள்ளது.

சென்ற சீசன் சொதப்பிய சி எஸ் கே டீம் இம்முரை கலக்கிவிட்டனர். வழக்கம் போல பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் சொதப்பிவிட்டனர். இம்முறை சன்ரைசர்ஸ் அணி பரிதாபமாக வெளியேறியது. டெல்லி, சென்னை, பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இன்று டெல்லி காப்பிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதும் முதல் குவாலிபயர் துபாயில் நடக்கிறது. நாளை ஆர் சி பி மற்றும் கே கே ஆர் மோதும் எலிமினேட்டர் ஷார்ஜாவில் நடக்கிறது.

ஐபிஎல் தொடங்கியதில் இருந்தே நன்றாக விளையாடும் டீம் சி எஸ் கே. சென்ற சீசன் மட்டும் தான் பிளே ஆப் ஆட தகுதி பெறவில்லை. அதே நேரத்தில் உரிமையாளர்கள் மாறிய பின்பு கலக்கலாக ஆடிவருகிறது டெல்லி. 2019 இல் மூன்றாவது இடம், சென்ற சீசன் பைனலில் தோல்வி, இம்முறை டேபிள் டாப்பர்ஸ். இந்த இரண்டு டீம்கள் மோதுவதால்  ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகம்.

சி எஸ் கே நிர்வாகத்தை பொறுத்தவரை வீரர்கள் மீது நம்பிக்கை வைக்கும் டீம். ஆடும் 11 இல் பெரிய மாற்றங்களை நாம் எதிர் பார்க்க முடியாது. தொடர்ந்து இரண்டு போட்டிகளாக ஆடும் உத்தப்பாவிற்கு பதிலாக மீண்டும் ரெய்னா அவர்களை சேர்ப்பார்களா என்பதே ஒரே கேள்வி, எனினும் எதிர் டீம்மில் அஷ்வின் இருப்பதனால் வாய்ப்பு கம்மி என்கின்றனர் கிரிக்கெட் வட்டாரங்களில்.

உத்தேச டீம் விவரம் – ருதுராஜ், டூபிளெஸ்ஸி, மொயின் அலி, ரெய்னா / உத்தப்பா, ராயுடு, தோனி, ஜடேஜா, பிராவோ, தாக்குர், சாஹர், ஹசல்வுட்

டெல்லி டீம் ஏற்கனவே இந்த சீசன் இதே மைதானத்தில் சென்னையை வீழ்த்தியுள்ளனர். டெல்லி டீம் மூன்று வெளிநாட்டு வீரர்களுடன் தான் விளையாடி வருகின்றனர். எனினும் இன்று காயம் காரணமாக விளையாடாமல் இருக்கும் ஆஸ்திரேலியாவின் ஆல் ரௌண்டார் மார்கஸ் ஸ்டோனிஸ், ரிப்பல் படேல் இடத்தில ஆடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

marcus stoinis

உத்தேச டீம் விவரம் – ஷா, தவான், ஐயர், பன்ட், ஸ்டோனிஸ் / படேல் / ஸ்மித், ஹெட்மயர், அஸ்வின், ரபடா, அக்ஷர் படேல், நோர்ச்சே, அவேஷ் கான்.

டீம் எப்படி பட்டதாக இருப்பினும் டாஸ் வென்ற பின் கேப்டன் சேசிங் தேர்ந்தெடுக்கவே வாய்ப்பு அதிகம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top