ரீ என்ட்ரியில் மக்கர் பண்ணும் வடிவேலு.. பெரும் தலைவலியில் லைக்கா நிறுவனம்

கடந்த 2006 ஆம் ஆண்டு வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற வைகைப்புயல் வடிவேலுவின் 23-ம் புலிகேசி திரைப்படத்திற்கு பிறகு, அந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ஏற்பட்ட பிரச்சினையினால் நடிகர் வடிவேலுக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்கக்கூடாது என ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு அந்த பிரச்சினை எல்லாம் சரிசெய்து மீண்டும் தற்போது தமிழ் சினிமாவிற்கு வடிவேலு ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வைகைப்புயல் வடிவேலு, சுராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணின் இசையமைப்பில் லைகா தயாரிப்பில் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மைசூரிலும், அதைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெற்றது.

இன்னும் அந்த படத்தில் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கி இருக்கிறது. அதை முடிக்க திட்டமிட்ட படக்குழுவினருக்கு வடிவேலு செய்த செயல் பேரதிர்ச்சியாக இருந்தது. நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் சிவாங்கியுடன் ஒரு பாடல் காட்சி மட்டும் இருக்கிறதாம்.

வடிவேலு அந்த பாட்டை முடிப்பதற்கு முன்னரே உதயநிதி படத்திற்கு கிளம்பி சென்றுவிட்டார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு தந்தையாக காமெடி கலந்த குணச்சித்திர கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வடிவேலு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் இருந்து கிளம்பி விட்டாராம். ஏற்கனவே இப்படித்தான் ஏகப்பட்ட வம்பை வழியில் இழுத்துப் போட்டுக்கொண்ட வடிவேலு, தற்போது மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுவது போல் ஒரு படத்தை முழுவதுமாக முடித்துவிட்டு அடுத்த படத்திற்கு செல்லாமல் பாதியிலேயே நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தை தவிக்கவிட்டு அம்போன்னு சென்றுவிட்டார்.

கூப்பிட்டது உதயநிதி என்பதால், அவர் மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகு, அரசியலில் முழு நேரம் ஈடுபட போகிறார் என்ற முடிவில் இருப்பதால் அவரைப் பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காகவே வடிவேலு இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கலாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்