Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தாமதமாகும் கமலின் படங்கள்… சோகத்தில் ரசிகர்கள்

அரசியல் கட்சி, பிக்பாஸ் ஷூட்டிங் என கமல் பரபரப்பாக இருப்பதால் அவரது இரண்டு படங்கள் ஷூட்டிங் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Kamalahaasan

உலக நாயகன் கமல் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான படம் விஸ்வரூபம். இந்த படம் பல்வேறு தடைகளைத் தாண்டி வெளியானாலும், பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளியது. அந்த படம் முடியும்போதே இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு விட்டது. மேலும், முதல் பாகத்தின் ஷூட்டிங்கின் போதே 40 சதவீத படப்பிடிப்பை முடித்து விட்டதாகவும் படக்குழு அறிவித்தது. இதனால், படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் கடந்த 2 வருடங்களாக படம் திரைக்கு வராமல் இருந்தது. ஒரு வழியாக ஷூட்டிங் வேலைகள் முடிக்கப்பட்டு படம் ஆகஸ்ட் 10ல் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேநேரம் கமல் நடித்து இயக்கும் சபாஷ் நாயுடு படத்தின் ஷூட்டிங் முழுமை பெறாமல் பாதியில் நிற்கிறது. ஷங்கர் இயக்கத்தில் அவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட இந்தியன் – 2 ஷூட்டிங் தொடங்காமலேயே இருக்கிறது. தசாவதாரம் படத்தில் இடம்பெற்றிருந்த பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் சபாஷ் நாயுடு படத்தில், கமலுடன் பிரமானந்தம், ஸ்ருதி ஹாசன் மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கின்றனர்.

கடந்த 2016ம் ஆண்டே அமெரிக்காவில் முதல் ஷெட்யூலை படக்குழுவினர் முடித்து திரும்பினர். சென்னை திரும்பிய கமல் மாடிப்படியில் இருந்து விழுந்ததில், அவருக்குக் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர், அரசியல் கட்சி, பிக்பாஸ் நிகழ்ச்சி என கமல் பிஸியாகிவிட்டதால், சபாஷ் நாயுடு படத்தின் படப்பிடிப்பு இதுவரை தொடங்கவில்லை. சபாஷ் நாயுடு படத்தில் கமல் மகள் அக்‌ஷரா ஹாசன், உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

vishwaroopam 2

vishwaroopam 2

பிக்பாஸ் முதல் சீசன் நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் ஷங்கர், இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக அறிவித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இதையடுத்து படத்தின் புரமோஷன் பலூன்களும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பறக்கவிடப்பட்டது. இதனால், படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், மக்கள் நீதி மய்யம் அரசியல் கட்சியைத் தொடங்கிய கமல், மக்களைச் சந்திப்பதிலும் மக்கள் பிரச்னைகளைப் பேசுவதிலும் பிஸியாகி விட்டார். இதனால் இந்தியன் – 2 படத்தின் ஷூட்டிங் இதுவரை தொடங்காமலேயே இருக்கிறது. தலைவர் அரசியல் கட்சியில் பிஸியாக இருந்தாலும் உலக நாயகனாக திரையில் அவரை அடிக்கடி பார்க்க முடியவில்லையே என கமல் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் தங்களது கவலையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top