Tamil Cinema News | சினிமா செய்திகள்
தெய்வமகள் வாணி போஜன் இப்ப என்ன செய்கிறார் தெரியுமா? கேட்டால் ஷாக் ஆயிடுவிங்க
வாணி போஜன் தெய்வமகள் சீரியல் மூலம் பல ரசிகர்களை தன் வசம் எடுத்து வைத்துள்ளார். ஒரு பேட்டியில் தெய்வமகள் சீரியல் முன்பு நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று கேட்டதற்கு பதில் அளித்துள்ளார்.
இவர் பி.ஏ பட்டதாரி மட்டுமல்லாமல் இதற்கு முன்பு ஏர் ஹோஸ்டஸாக பணியாற்றியுள்ளார். அவர் பணியாற்றிய அந்த நிறுவனம் பல ஊழியர்களை பணி நீக்கம் செய்ததால் அவர் வெளியேற்றப்பட்டார்.
இதனால் பெரும் வெறுப்பு அடைந்த வாணி போஜன் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ற தடுமாற்றத்தில் இருக்கும்போது மாடலிங் தேர்வு செய்துள்ளார். பின்பு சிறு சிறு விளம்பரங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதுதான் தெய்வமகள் சீரியல் இன் வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.
பல தடைகளுக்கு பின் தான் ஒரு நல்ல நிலைக்கு வந்துள்ளதாகவும் அவர் தற்போது வைபவ்வுடன் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
