தெய்வமகள் சீரியல் வில்லி காயத்ரிக்கு ரசிகர்கள், பேனர், கட் அவுட் என்று அமர்க்களப்படுத்தி வருகின்றனர்.

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தினந்தோறும் ஒளிபரப்பாகும், தெய்வமகள் சீரியல் தற்போது வீரநடை போட்டுக்கொண்டிருக்கிறது. இதில், வில்லியாக நடிக்கும் காயத்ரிக்கு தற்போது ரசிகர் பட்டாளம் குவிந்து வருகிறது. அவர்கள் பிளெக்ஸ் வைப்பது, பேனர்கள் வைப்பது என்று அலப்பறையை கூட்டி வருகின்றனர்.

தெய்வமகள் சீரியலில் ஜெய்ஹிந்த் விலாஸின் மூத்த மருமகள் காயத்ரி. இவர் செய்யும் கிரிமினலான வில்லத்தனம் சீரியல் பார்க்கும் இல்லத்தரசிகளுக்கு இவர் மீது கோபம் தான். இப்படி வில்லியாக இருக்கும் காய்த்ரிக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பட்டாளம் உருவாகி வருகிறது. அவரது புகைப்படங்களை பதிவிட்டு பாராட்டு மழை பொலிந்து வருகின்றனர். அதோடு அல்லாமல், அண்ணியாரின் விழுதுகள் என்று போட்டு காயத்ரி நற்பனி மன்றம் சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

சினிமா நடிகர் மற்றும் நடிகைகளுக்கு பேனர்கள் வைத்த காலம் கடந்து தற்போது டிவி நடிகைகளுக்கும் பேனர் வைக்கத் தொடங்கி விட்டனர்.