ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

தெய்வமகள் அண்ணியாருக்கு இவ்வளவு பெரிய மகளா.! மாடர்ன் உடையில் மஜாவான புகைப்படம்

சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை ரேகா கிருஷ்ணப்பா. அந்த சீரியலில் அண்ணியார் காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து மிரட்டியிருப்பார்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்து வருகிறார். அவர் வசந்த்குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பூஜா என்ற ஒரு மகளும் உள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரேகா தன் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை அவ்வப்போது வெளியிட்டு வருவார். தற்போது அவர் தன் மகளின் புகைப்படத்தை பகிர்ந்து ஒரு மகிழ்ச்சியான செய்தியை கூறியுள்ளார்.

இவருடைய மகள் வெள்ளித்திரையில் அறிமுகமாக இருப்பதாகவும், இது பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை ரேகாவிற்கு தெரிவித்து வருகின்றனர்.

pooja
pooja

பூஜா மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்திருக்கும் போட்டோவை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இவ்வளவு பெரிய மகளா என்று கேட்கின்றனர். மேலும் பூஜாவை விரைவில் கதாநாயகியாக பார்க்க காத்திருப்பதாக கூறியுள்ளனர்.

- Advertisement -

Trending News