தீபிகா படுகோனே அவர்களை பொறுத்தவரை பத்மாவதி படத்துக்கு எந்த அளவுக்கு அதிகமாக பிரச்சனை ஏற்பட்டதோ, அதை விட பன் மடங்கு பலன் கிடைத்தது. இன்று வரை ஹவுஸ் புல் காட்சிகள் தான். இவரின் அடுத்த படத்தை ‘ஓம் காரா’, ‘ஹைதர்’, ‘ரங்கூன்’ போன்ற படங்களை இயக்கிய விஷால் பரத்வாஜ் . தீபிகாவுக்கு ஜோடியாக இர்பான் கான் நடிக்கிறார்.

Irfaan Khan – Deepika Padukone – Vishal Bhardwaj

1980 களில் மும்பையில் மாஃபியா குயின் என்ற செல்லமாக அழைக்கப்பட்ட லேடி கேங்க்ஸ்டர் சப்னா தீதியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுப்பதாக சொல்லப்பட்டது. படத்தின் பெயர் ‘ராணி’ என்றும், இதில் சப்னா தீதியாக தீபிகா படுகோனும், அவரது கணவர் காளியா கதாபாத்திரத்தில் இர்ஃபான் கானும் நடிக்கிறார்கள் என்ற தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இயக்குனர் இந்த தகவல்கள் அனைத்தும் பொய் என்ற கூறி தன் ட்விட்டரில் மறுத்துள்ளார்.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

raani

முன்பே ஒரு பேட்டியில் இப்படம் சப்னா தீதி வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது என்ற தீபிகா கூறியுள்ளார். இந்நிலையில் இயக்குனர் மறுத்துள்ளார் . தீபிகா என்றாலே சர்ச்சை தான் போலிருக்கு .