Tamil Cinema News | சினிமா செய்திகள்
கேல் கடோட்டின் “ஒண்டெர் வுமன்” பாணியில் உருவாகிறதா தீபிகா படுகோனேவின் அடுத்த படம் ?
தீபிகா படுகோனே
32 வயதான தீபிகா மசாலா பாணியான படங்களை தவிர்த்து விட்டு கதையம்சமுள்ள மற்றும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் வகையிலான படங்களில் தான் நடித்து வருகிறார்.
“பத்மாவத்” படத்தை தொடர்ந்து இவர் விஷால் பாரதிவாஜின் “சப்னா தீதி” படித்தால் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. எனினும் இவருடன் ஜோடி சேரும் நடிக்கும் இர்ஃபான் கானின் உடல்நிலை சரி இல்லாததன் காரணத்தால் படப்பிடிப்பு தள்ளி போடப்பட்டிருக்கிறது.
இவர் அடுத்து தன் நீண்ட நாள் காதலர் ரன்வீர் சிங் அவர்களை திருமணம் செய்யவுள்ளார், அதனால் தான் படங்களில் கமிட் ஆகவில்லை என்று ஒரு புறம் பாலிவுட்டில் கிசு கிசுகிறார்கள். ஆனால் மறுபுறமோ இவர் இந்தியாவின் முதல் ‘ஃபீமேல் சூப்பர் ஹீரோ’ படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பட்ஜெட் 300 கோடிக்கு மேல். படத்தின் ப்ரீ – ப்ரொடக்ஷன் பணிகள் துவங்கி விட்டது என்று சொல்கிறார்கள்.
ஹாலிவுட்டில் வெளியாகி ஹிட்டான `வொண்டர் வுமன்’ கதாபாத்திரம் போல் இவரின் காஸ்ட்யூம் டிசைன் செய்யப்படுவதாகவும் கூறுகின்றனர். சைன்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகும் இப்படம் அடுத்த வருடம் துவங்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இவர்கள் சொல்வதை உறுதி படுத்துவது போல், சமீபத்தில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றிற்கு சூப்பர் ஹீரோயின் போலவே உடையும் அணிந்து வந்துள்ளார் தீபிகா.
