கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள பாலிவுட் நடிகை இப்போதே ரெடியாகிவிட்டார்.

ஆண்டுதோறும் பிரான்ஸ் நாட்டில் சர்வதேச கேன்ஸ் திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான 70வது கேன்ஸ் திரைப்பட விழா வரும் 17ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கயிருக்கிறது. இதில் பாலிவுட் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், சோனம் கபூர் ஆகியோர் ரெட் கார்பெட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இவர்களுடன் இணைந்து பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே முதன் முறையாக கேன்ஸ் விழாவின் ரெட் கார்பெட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். அதற்காக இப்போதே தன்னை தயார்படுத்திக் கொண்டார். அந்த வகையில் மும்பையிலிருந்து கிளம்பிய தீபிகா, அழகான ஆடை அணிந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். இதற்கு முன்னதாக தீபிகா இந்த மாதிரி உடை அணிந்தது இல்லையாம்.

தீபிகா மும்பை விமான நிலையத்தில் இருந்து கிளம்பும் போது பிளாக் மற்றும் பிரௌவுன் கலரின் அல்பெர்ட்டா பெர்ரெட்டி அவுட்புட் ஆடையுடன், லெதர் ஜாக்கெட் மற்றும் லௌபுதின் பூட்ஸ் அணிந்து கொண்டு பார்ப்பதற்கே அழகாக காட்சியளித்துள்ளார். அவரது இந்த ஸ்டைலுக்கு ஆடை வடிவமைப்பாளர் ஷலீனா நதானி தான் காரணமாம். இவர் தான் தீபிகாவின் ரெட் கார்பெட் நிகழ்ச்சியின் ஆடைக்கும் பொறுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

17ம் தேதி தொடங்கும் கேன்ஸ் திரைப்பட விழாவின் ரெட் கார்பெட் நிகழ்ச்சியில் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பாலிவுட் நடிகைகள் ரெட் கார்பெட்டில் ஒய்யாரமாக நடன அணிவகுப்பு நடத்தவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.