உலகில் அதிகம் சம்பாதிக்கும் முதல் 10 நடிகைகள் பட்டியலில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இடம் பிடித்துள்ளார்.

‌‌அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள 2016-ம் ஆண்டுக்கான பட்டியலில் தீபிகாவின் பெயர் இடம் பெற்றுள்ளது.

ஆண்டுதோறும் வெளியாகும் இப்பட்டியலில் இந்திய நடிகை ஒருவர் இடம் பெறுவது இதுவே முதல்முறையாகும். பெங்களூரைச் சேர்ந்த 30 வ‌யதான தீபிகா, 65 கோடி ரூபாய் ஆண்டு வருவாயுடன் பட்டியலில் 10-வது இடம் பிடித்துள்ளார். ‌‌

நடிப்பதற்கான சம்பளத்துடன் விளம்பரங்கள் மூலம் அதிகம் சம்பாதித்ததும் இப்பட்டியலில் தீபிகா இடம் பிடிக்க முக்கிய காரணமாக இருந்ததாக ஃபோர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது. இந்திய நடிகையான தீபிகா ஹாலிவுட் திரைப்படங்‌ளிலும் கதாநாயகியாக இந்த‌ ஆண்டில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் லாரன்ஸ், ஜூலியா ராபர்ட்ஸ், ஜெனிஃபர் அனிஸ்டன் உள்ளிட்ட பிரபல நடிகைககளும் முதல் 10 இடங்களில் உள்ளனர்.