பேட்மிட்டன் வீரர் பிரகாஷ் படுகோனேவின் செல்ல மகள் தான் தீபிகா படுகோனே. இவரும் சர்ச்சையும் உடன் பிறவா சகோதரிகள் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு புறம் இவர் நடித்த படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் என்றால், மறுபுறம் இவர் அணிந்து வந்த உடை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Deepika & Prakash Padukone
ராணி பத்மாவதி

சஞ்சய் லீலா பன்சாலி தயாரித்து, இசையமைத்து, இயக்கிய படம் “பத்மாவதி”. இதில் தீபிகா, ரன்வீர் சிங், ஷாஹித் கபூர், அதிதி ராவ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ராணி பத்மாவதியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். அவரது கணவராக ரத்தன் சிங் வேடத்தில் ஷாகித் கபூரும், அலாவுதீன் கில்ஜி வேடத்தில் ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர். 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராணி பத்மாவதியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு சரித்திர பின்னணியில் உருவாகியிருக்கிறது இப்படம்.

பாலிவுட்டின் பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, தீபிகா கூட்டணியில் ராம் லீலா, பாஜிராவ் மஸ்தானி படங்களை தொடர்ந்து பத்மாவதி படத்தில் மீண்டும் இணைகின்றனர். கடந்த ஐந்து வருடங்களில் இவர்கள் இணையும் மூன்றாவது படம்.

சர்ச்சையில் பத்மாவதி

இப்படம் வருகிற டிசம்பர் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது.  ரிலீசிற்கு நெருங்கி வரும் நேரத்தில் பல பிரச்சனைகள் கிளம்பியுள்ளது. மத சார்பில், ராஜ்புட் குடும்பத்தினர் தரப்பில் என்று பல எதிர்ப்புகள் குவிந்து வருகிறது. இயக்குனர் சரித்திரத்தை தவறாக சித்தரித்துள்ளார், ராணியின் மதிப்பை கெடுத்துவிட்டார் என்கின்றனர்.

Padmavati Ghoomar Song

குஹுமார் என்ற பாடலில் தீபிகா நடனம் ஆடியுள்ளார். ராஜ்புட் ராணியான பத்மாவதி வீர மங்கை, இவர் எந்த சூழலிலும் பொது மக்கள் முன்பு நடனம் ஆடியது இல்லை, எனவே இப்படத்தை தடை செய்வதே சரி என்று ராஜஸ்தானில் சில அமைப்புகள் போராடி வருகின்றனர்.

சேலையில் தீபிகா

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜி.கியூ பேஷன் நயிட்ஸ் நிகழ்ச்சிக்கு; இவர் உடுத்தி வந்த சேலை தான் இப்போதைய சர்ச்சை. சபையாச் முக்ஹெர்ஜீ என்பவர் வடிவமைத்தது இந்த உடை.

இந்த புடவைக்கு அவர் அணிந்து வந்ததோ மிகவும் மெலிதான ஜாக்கட் தான். மேலும் அவர் மாராப்பையும், துண்டு போல மடித்து போட்டிருந்தார். இதன் காரணமாக அவரின் மார்பு, மற்றும் அதன் சுற்றுப்பகுதி வெட்ட வெளிச்சமாக தெரிந்தது.

ஜாக்கட் அணிவதே மார்பை மறைக்கத்தான். அதுவே இல்லாத பொழுது பின் எதற்கு ஜாக்கட், என்பது போன்ற கேள்விகள் நாலா திசையில் இருந்தும் வருகிறது.

இந்த உடையை வைத்து இரண்டு நாட்களாக நெட்டிசன்கள் தீபிகாவை வறுத்தெடுக்கின்றனர். மறுபுறம்  தீபிகாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

ஊர் வாயை மூட முடியாது என்பது பழமொழி. இந்த நெட்டிசன்கள் கைகளை தடுக்க முடியாது என்பது தான் புது மொழி.