Tamil Nadu | தமிழ் நாடு
அறிவியலுக்கு எதிரானது தீபாவளி பண்டிகை.. சர்ச்சையை கிளப்பிய எதிர்க்கட்சியின் அரசியல் பிரமுகர்!
தமிழகத்தில் பெரியாரின் கொள்கையின்படி, ‘இந்துக் கடவுளின் நம்பிக்கைகள் பொய்’ என அரசியல் செய்து வரும் கட்சிதான் திராவிட கட்சியான திமுக.
ஏற்கனவே சுப வீரபாண்டியன் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் தீபாவளிக்கு எதிராக பல கருத்துக்களை வெளியிட்டு, இந்து மக்களின் மனதை புண்படுத்தி இருப்பதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்து இருந்தன.
இந்த நிலையில் தற்போது திமுக கட்சியை சார்ந்த ஆ ராசா என்பவர் தமிழர்களின் தீபாவளி கொண்டாட்டம் அறிவியலுக்கு எதிரானது என பேசியுள்ளார். இது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மேலும் ஆ ராசா, இதனால்தான் இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்துக்கள் சொல்வதில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து பேசிய ராசா, புருனோவின் வரலாற்றைப் பற்றி கூறியிருந்தார்.
அதில் ‘புருனோ என்னும் கிறிஸ்தவர் பூமி தட்டையானது என்று கூறினார். ஆனால் இது கிறிஸ்துவ பைபிளில் இல்லை என்பதால் அவரை எரித்துக் கொன்றார்கள் கிறிஸ்தவர்கள். அதற்குப்பிறகு பூமி தட்டையானது என நிரூபிக்கப்பட்டது. இதனால் அவரை எரித்த இடத்திலேயே கிறிஸ்தவர்கள் அவருக்கு சிலை வைத்தார்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் ராசா.
மேலும், ‘செய்த தவறை திருத்திக் கொள்ளும் பக்குவம் கிறிஸ்தவர்களுக்கு உள்ளது. ஆனால் இந்து மதங்களில் அது இல்லை’ என ராசா பேசியுள்ளார். இவ்வாறு ஆ ராசா பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி, பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது.
எனவே, இந்துக்களின் பண்டிகைகளை பற்றி திமுகவை சேர்ந்தவர்கள் தொடர்ந்து இழிவாக பேசி தமிழ் மக்களின் மனதையும், இந்து மக்களின் மனதையும் புண்படுத்துவதாக பல தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

raja-dmk
