திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

பிக் பாஸ் வீட்டில் ஜாக்லின் செய்த காரியத்தால் தீபக்கு ஏற்பட்ட அவமானம்.. ஒரு மன்னிப்பால் ஏற்பட்ட சம்பவம்

Vijay Tv Bigg Boss 8 Tamil: பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பித்து ஒரு மாதங்கள் கடந்த நிலையில் தற்போது வரை சுவாரஸ்யம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. ஆனாலும் சண்டைகளுக்கும் பஞ்சாயத்துகளுக்கும் பஞ்சமே இல்லை என்பதற்கு ஏற்ப தினந்தினம் சண்டை சச்சரவு பிரச்சனைகள் என புதுசு புதுசாக வெடித்துக் கொண்டே வருகிறது. அதற்கு காரணம் மற்ற சீசனங்களில் இல்லாத ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி என்று தனித்தனியாக பிரிக்கப்பட்டது தான்.

அதனால் பெண்கள் அணியை காலி பண்ண வேண்டும் என்று ஒட்டுமொத்த ஆண்கள் அணியும் கைகோர்த்து விட்டார்கள். அதேபோல ஆண்கள அணியை கவுக்க வேண்டும் என்பதற்காக பெண்கள் அணியில் இருந்து அவ்வப்போது ஏதாவது பிரச்சனைகள் வெடித்துக் கொண்டே வருகிறது. பொதுவாக பிக் பாஸில் ஸ்கூல் டாஸ்க் வந்தால் அதன் மூலம் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்கள் எப்படியாவது மக்கள் மனதில் இடம் பிடித்து விடுவார்கள்.

ஆனால் இப்பொழுது ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் ஸ்கூல் டாஸ்க், மொத்த வன்மத்தையும் கொட்டும் விதமாகவும், லவ் டார்ச்சர் அனுபவிக்கும் விதமாகத்தான் கன்டென்ட் போய்க் கொண்டிருக்கிறது. இதனால் பார்ப்பதற்கே வெறுப்பாக இருக்கிறது என்று ஒரு பக்கம் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் புதுசாக வந்திருக்க போட்டியாளர்களை விட நம் திறமையை அதிகமாக வெளிப்படுத்தி காட்ட வேண்டும் என்று பழைய போட்டியாளர்கள் முயற்சி எடுத்து வருகிறார்கள்.

ஆனால் அது எல்லாமே பிரச்சனையில் தான் முடிகிறது. அந்த வகையில் ஜாக்லினுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க் என்னவென்றால் மாரல் டீச்சர் என்ற கான்செப்டில் பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை கொடுப்பதுதான். அப்படி ஜாக்லின், தீபக் கொடுக்கப்பட்ட அறிவுரை என்னவென்றால் தனக்கு தெரிந்த விஷயம் எல்லாத்துக்கும் தெரிந்திருக்கணும் என்று நினைப்பது தவறு. அப்படி தமக்கு தெரிந்ததுனால நாம்தான் அறிவாளி என்று நினைப்பதும் தவறு என்று நேற்று சுட்டிக்காட்டி இருந்தார்.

இதனை கேட்ட தீபக் வன்மத்தை காக்கும் விதமாக கிடைக்கிற இடத்தில் தன்னை டேமேஜ் பண்ணுவதாக ஃபீல் பண்ணினார். இதை தெரிந்து கொண்ட ஜாக்லின் நான் யாரையும் புண்படுத்தி பேச வேண்டும் என்பதற்காக குறிவைத்து பேசவில்லை. அப்படி நான் பேசுனது உங்களுக்கு தவறாக தெரிந்தால் மன்னித்து விடுங்கள் என்று சொல்லி தீபக் காலில் விழுந்து விட்டார்.

ஆனால் விழுந்து விட்டு மைக்கை தூர எறிந்து பாத்ரூமில் போய் வழக்கம் போல் ஜாக்லின் அழ ஆரம்பித்து விட்டார். ஜாக்லின் என்னமோ ஒரு மன்னிப்பு கேட்கிறோம் என்ற நினைப்பில் செய்தாலும் அது வெளியே இருந்து பார்க்கும் பொழுது தீபக் மீது தவறான கருத்துக்களை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது. கிடைக்கிற கேப்பில் எல்லாம் ஸ்கோர் பண்ணனும் என்பதற்கேற்ப ஜாக்குலின் சில விஷயங்களை மறைமுகமாக குத்துகிறார்.

அதில் தற்போது தீபக் பாதிக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது. இதற்கு பேசாமல் ஜாக்லின் அவருடைய பக்கத்தில் இருக்கும் நியாயத்தை தீபக்கிடம் எடுத்து சொல்லிவிட்டு வேண்டுமென்றால் ஒரு மன்னிப்போடு கேட்டு போயிருக்கலாம். ஆனால் அதற்காக அதிக ஸ்கோர் எடுப்பதற்காக தீபக் காலில் ஜாக்லின் விழுந்து மன்னிப்பு கேட்டது தீபக்கை அதிக அளவில் டேமேஜ் பண்ணியது போல் இருக்கிறது.

- Advertisement -

Trending News