புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

எரிமலையாய் வெடித்த தீபக்.. மஞ்சூரியன் ஆன மஞ்சரி, பிக்பாஸ் இன்றைய சம்பவம்

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து நன்றாக சென்று கொண்டிருக்கிறது. இதுவரை சூர மொக்கையாக இருந்த நிலை இப்போது மாறி இருக்கிறது.

அதிலும் தீபக் கேப்டன் பொறுப்பை ஏற்ற பின்பு இன்னும் சுவாரஸ்யம் கூடியிருக்கிறது. இதை பிக்பாஸ் கூட வெளிப்படையாக கூறி பாராட்டி இருந்தார். ஆனால் அவருடைய கேப்டன்சியை பறிக்க வேண்டும் என வீட்டில் சிலர் வன்மத்துடன் வேலை பார்த்து வருகின்றனர்.

அதில் நேற்றைய எபிசோடில் சாச்சனா ஒரு பூவை கட் செய்து தன் கோபத்தை வெளிப்படுத்தினார். இதில் தீபக்குக்கு பார்வையாளர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். சிலர் அவருடைய பேச்சு ரூடாக இருப்பதாக கூறுகின்றனர்.

ஆனால் இந்த வாரம் அவருடைய தலைமையில் வீடு சிறப்பாக தான் சென்று கொண்டிருக்கிறது. பல சமயங்களில் அவர் நிதானத்துடன் பிரச்சனையை கையாளுகிறார். இருப்பினும் தற்போது அவர் கேப்டன் என்பதை மறந்து எரிமலையாக வெடித்துள்ளார்.

தீபக் மஞ்சரி இடையே வெடித்த சண்டை

இதற்கு முக்கிய காரணம் மஞ்சரி தான். சாப்பாட்டு விஷயத்தில் தேவையில்லாமல் ஒரு பிரச்சனை செய்து கேப்டன் பொறுப்பை பறிக்க ஒரு பூவை அவர் கட் செய்துள்ளார். அதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

அதில் சாப்பாடு விஷயத்தில் அருண் மஞ்சரி இடையே வாக்குவாதம் நடக்கிறது. தீபக் அதை சரி செய்ய முயற்சிக்கும் போது சண்டை பெரிதாகிறது. இதில் கேப்டன் என்பதை மறந்து நான் தீபக்காக தான் பேசுறேன் என கத்த ஆரம்பித்து விடுகிறார்.

உடனே மஞ்சரி இதுதான் சாக்கு என தன் வன்மத்தை காட்டி பூவை வெட்டி விடுகிறார். இதை பார்த்த ஆடியன்ஸ் அவரை திட்டி வருகின்றனர். மேலும் தீபக் மேல் தவறு கிடையாது. மஞ்சரி தான் வன்மத்தை கொட்டுகிறார் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பார்க்கலாம் நாளை விஜய் சேதுபதி இந்த விஷயத்தை எப்படி தீர்த்து வைக்கிறார் என்று.

- Advertisement -

Trending News