அரசியல் சாம்ராஜ்யத்தை முடித்துக்கொண்ட தீபா.! ஷாக்கான தொண்டர்கள்.. காரணம் தெரியுமா?

தமிழக முன்னால் முதல்வர் ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு காலமான பின் தமிழக மக்களுக்கு அறிமுகமானவர் ஜெ தீபா. இவர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அப்போதைய காலகட்டத்தில் இவருக்கு மக்கள் மற்றும் தொண்டர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால் அதன் மூலம் அரசியலில் குதித்த இவர் எம்.ஜி.ஆர். – அம்மா – தீபா பேரவை என்ற கட்சியை துவங்கினார்.

இவர் கட்சி ஆரம்பித்து முதன் முதலாக ஆர்கே நகர் இடை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் அப்போது இவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. அதன் பின் இவர் தற்போது நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கூட போட்டியிட்டவில்லை.

இதனால் சமீப காலமாக இவரின் கட்சி இருப்பதே பலருக்கு தெரியாமல் போக துவங்கியது. இந்நிலையில் இவர் நேற்றைய தினம் தனது பேஸ்புக் பக்கத்தில் நான் அரசியலிலிருந்து முழுமையாக விலகுகிறேன். என்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என பதிவிட்டார். அதன் பின் சில நிமிடங்களில் அதனை நீக்கி விட்டார்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட இவர் அதில் ,” என் உடல் நிலை தற்போது சரியில்லாததன் காரணத்தினால் நான் அரசியலிலிருந்து விலகுகிறேன். அரசியலில் களமிறங்கியதே தவறு என்பதனை பலமுறை நான் உணர்ந்து விட்டேன். வீட்டில் உள்ளவர்களின் கட்டாயத்தினாலே நான் அரசியலுக்கு வந்தேன். இனிமேல் எக்காரணம் கட்டாயம் அரசியலுக்கு வரமாட்டேன்” என கூறினார்.

இவரின் இந்த கருத்து அந்த கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் பேரதிர்ச்சியை அளித்துள்ளது.

Leave a Comment