fbpx
Connect with us

Cinemapettai

கட்சி பெயர், கொடி வெளியிட்ட தீபா..! ஆர்.கே நகரில் நிற்கப் போவதாக அதிரடி அறிவிப்பு..

deepa-flag

News | செய்திகள்

கட்சி பெயர், கொடி வெளியிட்ட தீபா..! ஆர்.கே நகரில் நிற்கப் போவதாக அதிரடி அறிவிப்பு..

அதிமுக கொடி போன்றே ஒரு கொடியை தயார் செய்து எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் கொடி இதுதான் என்று தீபா இன்று செய்தியாளர்களிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். திமுகவில் இருந்து எம்ஜிஆர் பிரிந்து அதிமுகவை உருவாக்கியதன் அடையாளமாக திமுகவின் கருப்பு சிவப்பு நிறக் கொடியின் இடையில் வெள்ளை நிறத்தை சேர்த்து அதிமுகவின் கொடியை எம்ஜிஆர் உருவாக்கினார்.

ஜெயலலிதா இறப்பிற்கு பின்னர் அரசியலில் குதித்துள்ள தீபா அவரது கட்சியை அதிமுக கொடியைப் போன்றே வேறுபாடுகள் இன்றி உருவாக்கி அறிமுகம் செய்துள்ளார். அந்தக் கொடியில் திமுக கொடியின் அடையாளமான கருப்பு நிறம் மேல் புறமும், சிவப்பு நிறம் கீழேயும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் நடுவில் தீபாவின் அத்தையான ஜெயலலிதாவிடம் எம்ஜிஆர் செங்கோல் கொடுக்கும் படத்தை வட்ட வடிவத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவிற்கு எம்ஜிஆர் செங்கோல் கொடுக்கும் படம் பிரசித்தி பெற்றது. எல்லா போஸ்டர்களிலும் இடம் பெற்று மக்கள் மனத்தில் பதிந்து போன படம் இது. இதைத்தான் தற்போது கொடியின் மையப் பகுதியில் தீபா வைத்துள்ளார். இது எந்த அளவிற்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையையும், அதிமுகவின் கொடியையும் பிரித்து காட்டும் என்பது தெரியவில்லை.

ஆர்.கே நகரில் வர உள்ள இடைத் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபா அறிவித்துள்ளார். ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி மறைந்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தீபா, தீவிர அரசியலில் குதிக்கப் போவதாக அறிவித்தார். அதுகுறித்த முறையான அறிவிப்பை ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று அறிவிக்கப்படும் என்று தீபா ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்நிலையில், தியாகராயர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் தொடங்கிய பேரவையின் பெயரையும் கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார். அவரது அமைப்பிற்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்று பெயரிட்டுள்ளார்.

இந்தப் பேரவையின் பொருளாளராக தான் பொறுப்பேற்றுள்ளதாக அறிவித்த தீபாவிடம், ஆர்.கே. நகரில் வர உள்ள இடைத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று கேள்வி செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு கண்டிப்பாக போட்டியிடுவேன் என்று டக்கென்று பதில் சொன்னார் தீபா. மேலும், வர உள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோம் என்று தீபா அறிவித்துள்ளார்.

deepa-flag

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top