திங்கட்கிழமை, நவம்பர் 4, 2024

சந்தேகப் பார்வையில் சிக்கிய ராஜாராணி சந்தியா.. சரவணன் எடுத்த அதிரடி முடிவு

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் கணவனின் பாராட்டு விழாவிற்கு செல்லவிடாமல் வில்லி அர்ச்சனா சந்தியாவை படாதபாடு படுத்திக் கொண்டிருக்கிறாள். இந்நிலையில் சந்தியாவின் கனவு என்ன என்பது சரவணனுக்கு தெரியவந்துள்ளது.

இதை சந்தியா வாயிலிருந்தே கேட்க வேண்டும் என்ற ஆசையில் சரவணன் சந்தியாவிடம் துருவித்துருவி கேள்விமேல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறான். ஒரு வேளை ஏதோ மறைக்கிறார் என்பதை சரவணன் கண்டுபிடித்து விட்டாரோ என்ற சந்தேகம் சந்தியாவிற்கு எழுந்திருக்கிறது.

இருப்பினும் சரவணனிடம் தன்னுடைய கனவை சொல்ல மறுக்கும் சந்தியா, ஒரு கட்டத்தில் அதை தெரியப்படுத்து விடுகிறார். அதன்பிறகு சரவணன், ‘இனி உங்களுடைய கனவை நான் சுமந்து கொண்டு அதை நிறைவேற்றுவேன்’ என சந்தியாவிற்கு உறுதியளிக்கிறான்.

எனவே சந்தியாவாக நடித்துக்கொண்டிருக்கும் ஆலியா மானசாவிற்கு பிரசவ நேரம் நெருங்கிக் கொண்டிருப்பதால், இன்னும் சில மாதங்கள் ராஜா ராணி2 சீரியலின் கதை இப்படி தான் செல்லும்.

அதன் பிறகு சந்தியா போலீஸ் அதிகாரிகளாக மாற நினைப்பதை வீட்டில் உள்ளவர்களை சம்மதிக்க வைக்க இந்த காலத்தை பயன்படுத்திக் கொள்ளும் சீரியல் இயக்குனர், அதன் பிறகு ஆலியா மானசாவிற்கு குழந்தை பிறந்த பின், மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து ஐபிஎஸ் அதிகாரியாக ராஜா ராணி2 சீரியலில் சந்தியா கலக்கப் போகிறார்.

உண்மையிலேயே சந்தியா தற்போது கர்ப்பமாக உள்ளார், அவர் குழந்தை பிறந்து சினிமாவிற்கு வரும் வரை இந்த சீரியல் ஓடும் என்பதை உறுதி செய்து விட்டனர். டிஆர்பியை ஏற்ற வேறு வழி தெரியவில்லை போல!

- Advertisement -spot_img

Trending News